'அந்த நிகழ்ச்சிக்கு அவரும் வந்தாரு, அப்போ'... 'மாடல் நடிகையின் பகீர் புகாரால் பரபரப்பு'... 'தேர்தல் நேரத்தில் அனலை கிளப்பியுள்ள சம்பவம்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு நியூயார்க்கில் டென்னிஸ் தொடர் நடந்தபோது, மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் அதில் கலந்து கொண்டுள்ளார். அதில் முன்னாள் மாடல் நடிகை ஏமி டோரிஸும் கலந்து கொண்டுள்ளார். அப்போது டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னுடைய அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ள ஏமி, தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக டிரம்ப் தன்னை இறுக அணைத்ததாகவும், முத்தமிட்டதாகவும், அவருடைய பிடியில் இருந்து தான் வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது வைக்கப்பட்டுள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள டிரம்ப், "தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதற்காக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை ஏவிவிட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப்க்கு எதிராக இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. இதுவரை 12க்கும் அதிகமான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 23 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மாடல் நடிகை அளித்துள்ள புகார் அந்நாட்டு அரசியலில் அனலை கிளப்பியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘H1B விசா வழக்கு’.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு..!
- அமெரிக்க மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. அதிபர் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
- அமெரிக்காவின் பிரபல நிறுவனத்துக்கு கைமாறும் ‘TikTok’.. கெடு விதித்த கடைசி நாளில் நடந்த ‘டீலிங்’..!
- 'கூடி வந்த கல்யாணம், கைக்கு வந்த வேலை'... 'வருங்கால கணவருடன் அவுட்டிங் போன இளம் என்ஜினீயர்'... ஒரே ஒரு செல்ஃபியால் வந்த விபரீதம்!
- "சவாலை ஏற்கிறேன்!".. 'டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்' கேட்டதற்காக களத்தில் இறங்கும் 'இவாங்கா டிரம்ப்'!
- 'எங்கிட்ட அவரு எல்லாமே சொல்லுவாரு'... 'ட்ரம்ப்பிடம் கிம் ஜாங் உன் பகிர்ந்த 'பகீர்' தகவல்!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் ரகசியம்'...
- 'அந்த நாட்டையே இந்தியா முந்திடுச்சு, இப்படியே போனா'... 'இதுவரை இல்லாத பாதிப்பாக ஒரே நாளில்'... 'வெளியாகியுள்ள ஷாக் தகவல்!'...
- 'இந்தியர்கள் ஓட்டு உங்களுக்கு கிடைக்கும்னு நினைக்கறீங்களா?'... 'எனக்கு அவரோட சப்போர்ட் இருக்கு'... 'அதிபர் ட்ரம்ப் நம்பிக்கையுடன் சொன்ன பதில்'...
- 'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்!'...
- 'இத்தனை பாதிப்புக்கு நடுவிலும்'... 'புதிதாக 12,000 பேருக்கு வேலை'... 'பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!'...