ஆமா ‘ஜோ பைடன்’ ஜெயிச்சிட்டாரு.. ஆனா எப்படி தெரியுமா..? பரபரப்பை கிளப்பிய டிரம்ப்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 232 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் தனது தோல்வியை ஏற்க அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். மேலும் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தேர்தல் மோசடியானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட் செய்துள்ளார். அதில், ‘அவர் (ஜோ பைடன்) வெற்றி பெற்றுள்ளார். ஏனென்றால் இந்த தேர்தல் மோசடியானது. வாக்கு எண்ணிக்கையில் கண்காணிப்பாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இடதுசாரி சித்தாந்தம் கொண்ட டொமினியன் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வாக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நன்மதிப்பற்ற அந்நிறுவனத்தின் மோசமான உபகரணங்களால் டெக்சாசில் கூட தகுதிபெற முடியாது (நான் அதிகவாக்குகளில் வெற்றிபெற்ற இடம்). மேலும் போலி, அமைதியான ஊடகங்கள் மற்றும் இன்னும் சிலவற்றால் பைடன் வெற்றி பெற்றுள்ளார்’ என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எப்பா ஒரு நிமிஷம் ‘தலையே’ சுத்திருச்சி.. டிரம்பை ‘விவாகரத்து’ செஞ்சா மெலனியாவுக்கு செட்டில்மெண்ட் பணம் மட்டுமே இவ்ளோ வருமா..?
- இருக்குற ‘பிரச்சனையில’ இப்போ இது வேறயா.. எலெக்ஷன் முடிஞ்சது கூட தெரியாம டிரம்ப் ‘மகன்’ பார்த்த வேலை.. விட்டு ‘விளாசும்’ நெட்டிசன்கள்..!
- “சாதி பெயரை ஏன் நீக்கணும்? மாட்டேன்.. அது என் அடையாளம்.. வரலாறு” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள தமிழக பெண் ‘பரபரப்பு’ பதில்!
- ஜோ பைடன் அமைத்த மருத்துவ குழுவில் ‘தமிழ் பெண்’.. நினைக்கவே பெருமையா இருக்கு.. எந்த ஊர் தெரியுமா..?
- தங்க சீட் பெல்ட்.. பிரச்சாரத்துக்கு சூறாவளியா சுத்துன ஹெலிகாப்டர்.. டிரம்ப் எடுத்த ‘திடீர்’ முடிவு..!
- ஒரு ‘கிரேட்’ நியூஸ்.. இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்.. டிரம்ப் ‘அதிரடி’ ட்வீட்..!
- ஜோ பைடன் மூதாதையர் ‘சென்னையில்’ வாழ்ந்து இருக்காங்களா..? வியப்பை ஏற்படுத்திய தகவல்..!
- சொன்னா கேளுங்க.. அதை ‘ஒத்துக்கோங்க’.. மனைவி சொன்ன ‘அட்வைஸ்’.. பிடிவாதம் பிடிக்கும் டிரம்ப்..!
- 19 வயசுல என் ‘அம்மா’ இங்க வந்தாங்க.. இந்த ஒரு விஷயத்தை முழுசா நம்புனாங்க.. கமலா ஹாரிஸ் உருக்கமாக சொன்ன தகவல்..!
- “முதல் பந்தே சிக்ஸரா?”.. அமெரிக்காவின் புதிய அதிபர் ‘ஜோ பைடனின்’.. இந்தியர்கள், முஸ்லிம்கள், H1B விசா தொடர்பான முக்கிய முடிவு?