'ஃபைஸரைத் தொடர்ந்து இதிலும் கடும் பக்கவிளைவா???'... 'தீவிர சிகிச்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்?!!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஃபைஸரைத் தொடர்ந்து மாடர்னா கொரோனா தடுப்பூசியும் பக்கவிளைவை ஏற்படுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஃபைஸர் கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து தற்போது மாடர்னா தடுப்பூசியும் பக்கவிளைவை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஃபைசர் தடுப்பூசியை தொடர்ந்து கடந்த வாரம் முதல் மாடர்னா தடுப்பூசியும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக  ஃபைசர் தடுப்பூசியால் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது முதல்முறையாக மாடர்னா தடுப்பூசியாலும் பக்கவிளைவுகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டனைச் சேர்ந்த புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர் ஒருவர் மாடர்னா தடுப்பூசியால் பக்கவிளைவுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. மாடர்னா மருந்தை எடுத்துக் கொண்டதுமே அவருக்கு உடலில் கடுமையான விளைவுகள் ஏற்பட்டதாகவும், மயக்கம், இதய படபடப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  அமெரிக்க செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முன்பாக இங்கிலாந்தில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸை தங்களுடைய தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியும் எனவும், அதன் தடுப்பூசி 94.5 சதவீத செயல்திறனை கொண்டதெனவும்  மாடர்னா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்