'வரலாற்றில் ஒரு கருப்பு நாள்'... 'ஆட்டம் கண்ட கச்சா எண்ணெயின் விலை'... உறைந்து போன அமெரிக்க பங்கு சந்தை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இதுவரை இல்லாத நிகழ்வாக அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் சென்றதால் வர்த்தகர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள்.

கொரோனாவின் ஆட்டம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் நிலையில், பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. வாகன போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் அடியோடு முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் தேவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக, ஒரு பேரல் (158.98 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் (இந்திய மதிப்பில் 76 ரூபாய் 66 பைசா) கீழ் சென்றது. அதவாது ஒரு பேரல் கச்சா எண்ணெய் -39.14 டாலர்கள் (மைனஸ்) என விற்பனை செய்யப்பட்டது. விற்பனையாளர்கள் கச்சா எண்ணெய்யை வாங்குபவர்களுக்கு பணம் கொடுத்து எண்ணெய்யை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் அளவிற்கு சென்றது தான் சோகத்தின் உச்சம்.

கச்சா எண்ணெயின் விலை யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு, வரலாற்றில் முதல்முறையாக பெரும் சரிவை சந்தித்துள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்