'அப்பாடா!'.. 'இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி' கொடுத்த அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

H1-B விசா வைத்திருக்கும் மனைவி மற்றும் கணவர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதகான தடை உத்தரவை விதிக்க, அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ள தகவல் இந்தியர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளதாகக் கருத்துகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவிலேயே தங்கி அங்கு இருக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அந்நாடு அரசால் தரப்படும் விசா H1-B என்கிற விசா. ஆனால் இந்த விசா வைத்துக்கொண்டு அந்நாடில் பணிபுரிபவர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுக்கு, அந்நாட்டு அரசு H-4 விசாவை வழங்கிக் கொண்டு வந்தது.

முன்னதாக ஒபாமாவின் ஆட்சி காலத்தில்தான் அந்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான அனுமதியைத் தரக்கூடிய H1-B விசா வழங்கப்பட்டது. இதனால் பல இந்தியர்கள் பலனடைந்து வந்த நிலையில், சேவ்ஸ் ஜாப்ஸ் யுஎஸ்ஏ உள்ளிட்ட பல அமைப்பினர் ட்ரம்ப்பின் ஆதரவுடன், கொலம்பியா நீதிமன்றத்தில் இந்த விசா வழங்கப்படுவதற்கு எதிரான வழக்குகளைத் தொடர்ந்தனர்.

ஆனால் இவ்வழக்கு முறையாக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதால், தற்காலிகமாக, குறிப்பிட்ட விசா வழங்குவதற்கான தடை உத்தரவை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் இந்தியர்கள் தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளனர்.

H1BVISA

மற்ற செய்திகள்