'940லிருந்து 140 மில்லியன் டாலர்!'.. TCS நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை குறைப்பு! .. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் மருத்துவ மென்பொருள் நிறுவனமான எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம், டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் மீது தொடர்ந்த வர்த்தக ரகசிய முறைகேடு வழக்கில், டாடா கன்சல்டன்ஸிக்கு எதிராக 280 மில்லியன் டாலர் தண்டனையானது அதிகமானது என்று அமெரிக்காவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும் சிகாகோவில் உள்ள நீதிமன்றம் 140 மில்லியன் டாலர் இழப்பீட்டினை மட்டுமே உறுதி செய்துள்ளதாக, இன்று பங்கு சந்தைக்கு ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ள சிஎஸ் நிறுவனம், எபிக் நிறுவன வர்த்தக தரவுகளை தாங்கள் தவறாக பயன்படுத்தியதற்காக எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தின் முன் டிசிஎஸ் தனது நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக எபிக் மென்பொருள் நிறுவனம் தங்களது அறிவு சார்ந்த சொத்துக்களை திருடியதாக கடந்த 2014இல் டிசிஎஸ் க்கு எதிராக வழக்கு தொடர்ந்ததை அடுத்து 2016-ஆம் ஆண்டு 940 மில்லியன் டாலர்களை டிசிஎஸ்ஸிடம் இருந்து பெற்றதாகவும் தெரிகிறது. 2017ல் விஸ்கானின் நீதிமன்ற நீதிபதி 470 மில்லியன் டாலர்களாக இந்த தொகையை குறைத்தார். அதே சமயம் 2018ல் டிசிஎஸ் நிறுவனம் எபிக் சிஸ்டம்ஸ் 440 மில்லியன் டாலர் கொடுத்ததாக கூறியுள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்து விசாரித்த விஸ்கான் நீதிபதி இந்த தீர்ப்பினை மாற்றியமைத்து 470 மில்லியன் டாலர்களாக குறைத்தார். இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனம், சிகாகோவில் உள்ள ஏழாவது சுற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த சிகாகோ நீதிமன்றம் 440 மில்லியன் டாலர்கள் அதிகம்தான் என்றாலும் எபிக் நிறுவனத்துக்கு இழப்பீட்டு தொகையாக 140 டாலர்களை செலுத்த டிசிஎஸ்க்கு உத்தரவிட்டுள்ளது. 

எபிக் சிஸ்டம்ஸ் விஸ்கானில் உள்ள வெரோனாவை தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம். அமெரிக்கா முழுவதும் மருத்துவமனை மற்றும் பிற சுகாதார வசதிகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ பதிவுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான எபிக் சிஸ்டம் நிறுவனத்துக்கு இந்தியாவின் கார்ப்பரேட் வருடமாக டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் வர்த்தக ரகசிய முறைகேடு வழக்கில் இழப்பீடு தொகையை கொடுக்க வேண்டி அளிக்கப்பட்டவைதான் மேற்கண்ட தீர்ப்புகள். இதில் அமெரிக்க நீதிமன்றமும் 140 மில்லியன் டாலர் செலுத்த வேண்டி சிகாகோ நீதிமன்றம் அளித்த தீர்ப்பினையே ஆதரித்து உறுதி செய்துள்ளது. அதை செலுத்த டிசிஎஸ்க்கு அறிவுறுத்தியுமுள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்