இந்திய ஐடி ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’.. H1B விசா விவகாரம்.. அமெரிக்க நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > உலகம்எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த இரு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை செய்வதற்காக அந்நாட்டு அரசு எச்1 பி விசாக்களை வழங்கி வருகிறது. கொரோனா நோய் தொற்று பாதிப்பின் விளைவாக, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உறுதி செய்வதற்காக எச்-1 பி விசாக்களில் அதிபர் டிரம்ப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள அளவீட்டில் மாற்றம் மற்றும் சிறப்பு வேலை பிரிவில் உள்ள பல முக்கிய பிரிவுகளை நீக்கவும் டிரம்ப் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அமெரிக்க வர்த்தக மையம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது, எச் 1பி விசா தொடர்பாக அரசு மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு போதுமான அறிவிப்பு இல்லை, மேலும் கால அவகாசமும் வழங்கப்படவில்லை. இதனால் அமெரிக்காவில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதாக வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்பி வொயிட், ‘அரசானது வெளிப்படைத்தன்மை நடைமுறைகளை பின்பற்றவில்லை. இந்த மாற்றங்கள் தொற்று நோய் பாதிப்புக்கான அவசரகால நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் டிரம்ப் நிர்வாகம் இதுகுறித்து சில காலமாக கூறிவந்தது. ஆனால் அக்டோபரில் தான் விதிகளை வெளியிட்டது. அதனால் டிரம்ப் அரசு கொண்டு வந்த தொழிலாளர் மற்றும் எச்1 பி விசா தொடர்பான இரண்டு விதிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டார். இந்த உத்தரவு எச்1பி விசா மூலம் அதிகம் பயனடைந்து வரும் இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வாழ்த்துக்கள்ங்க!'... கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, டிரம்ப் நியமித்த முக்கிய ‘பொறுப்பில் இருந்த’ அதிகாரி ‘எடுத்த’ முடிவு!
- "இந்த தப்பு மட்டும் நடந்துடவே கூடாது... பலரோட உயிருக்கே ஆபத்தாகிடலாம்"... 'தடுப்பூசி விஷயத்தில் FDAவின் முக்கிய எச்சரிக்கை!!!'...
- ‘அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்’!.. கொரோனா வார்டில் ‘கண்கலங்க’ முதியவர் கேட்ட கேள்வி.. நொறுங்கிப் போன மருத்துவர்..!
- ‘நடுக்கடலில் திடீரென ரிப்பேர்’.. மூழ்கிய படகின் உச்சியில் 2 நாட்களாக நின்ற நபர்.. மீனை சாப்பிட்டு உயிர் பிழைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!
- 'ஆறு மனமே ஆறு'!.. 'போனது போச்சு... ஆக வேண்டியத பாருங்க'!.. டிரம்ப் எடுத்த அதிசய முடிவு!.. ஜோ பைடன் ஹேப்பி அண்ணாச்சி!!
- 'ஒரு வழியாக பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசி!!!'... 'தேதியுடன் முக்கிய தகவலை பகிர்ந்த தடுப்பூசி திட்டத்தின் தலைவர்!...
- 'அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே'... 'அதன் தடுப்பூசிக்கு முந்திக்கொள்ளும் நாடு?!!'... 'இந்த வாரத்திலேயே வரவுள்ள ஹேப்பி நியூஸ்!!!'...
- 'ஒன்னு ரெண்டு எடத்துல மட்டுமில்ல'... 'உலகம் முழுதுவமே நடந்த வியத்தகு மாற்றம்?!!... 'கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு இடையில்'... 'நாசா பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்!!!'...
- கொரோனா வைரஸ் ‘2-வது அலை’.. 11 நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவது நிறுத்தம். அதிரடியாக அறிவித்த நாடு..!
- 'அடுத்த மாதமே மக்கள் பயன்பாட்டுக்கு வரும் தடுப்பூசி???'... '95% பலன் கொடுக்குது!!!'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!'...