"லாட்டரி'ல ஜெயிச்சது என்னமோ 8 டாலர் தான்"..  ஆனா டிக்கெட்'ட தேடி பாத்தப்போ தான்.. செம ஷாக் ஒண்ணு வெயிட்டிங்'ல இருந்துருக்கு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த உலகத்தில் உள்ள பல நாடுகளில், லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது சட்ட பூர்வமாகவே செயல்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

அது மட்டுமில்லாமல், இந்த லாட்டரி டிக்கெட் வாங்கும் போது, பலருக்கும் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான பரிசு தொகை அடிப்பதை கூட நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அதே வேளையில், லாட்டரி டிக்கெட் மூலம் ஏதாவது வினோதமான அல்லது வேடிக்கையான நிகழ்வுகள் நிகழ்வதைக் கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி பெரிய அளவில் பரிசு விழவில்லை என்றாலும், லாட்டரி டிக்கெட்டை சுற்றி நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

US பகுதியை அடுத்த Salem என்னும் இடத்தில் வசித்து வருபவர் Nathan. இவரது மனைவி பெயர், Rachael Lamet. இவர்கள் இருவரும் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை 3 டாலருக்கு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, தங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு பரிசும் விழுந்துள்ளது. பரிசு என்றவுடன் மில்லியன் டாலர்கள் என நினைத்து விட வேண்டாம்.

3 டாலருக்கு லாட்டரி வாங்கிய Nathan மற்றும் Rachael தம்பதிக்கு 8 டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. ஆனால், அந்த லாட்டரி டிக்கெட்டை தேடிய இருவருக்கும் கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. தங்கள் வீட்டின் மேசையில் லாட்டரி டிக்கெட்டை அவர்கள் வைத்திருக்கவே, அவரது செல்லப் பிராணிகளான இரண்டு நாய்கள், அந்த லாட்டரி டிக்கெட்டினை துண்டு துண்டாக கிழித்து போட்டுள்ளது.

இதன் காரணாமாக, கிழிந்த லாட்டரி டிக்கெட்டினை ஒன்றாக சேர்த்து சம்மந்தப்பட்ட லாட்டரி நிறுவனத்திற்கு Nathan அனுப்பி வைத்ததாக கூறப்படும் நிலையில், காரணம் யார் என குறிப்பிட்டு, இரண்டு நாய்களின் புகைப்படத்தினையும் உடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த லாட்டரி எண், 8 டாலர் பரிசுக்கான எண்ணிற்கு ஒத்து போனதால், கிழிந்து இருந்த போதும் அவர்களுக்கு பரிசு தொகையை அனுப்பி வைத்துள்ளனர்.

கிழிந்து போய் இருந்ததால், நிச்சயம் அந்த 8 டாலருக்கு கிடைக்காமல் போய் விடும் என Nathan கருதி இருந்த நிலையில், அந்த லாட்டரி நிறுவனமோ, பதிலுக்கு பரிசு தொகையை அனுப்பி வைத்துள்ளது.

8 டாலர்கள் தான் பரிசு தொகையாக கிடைத்தாலும், ஒரு வேளை Nathan மற்றும் Rachael வாங்கிய லாட்டரிக்கு பல மில்லியன் டாலர்கள் பரிசாக கிடைத்து, நாய் கிழித்து போட்டிருந்தால் நிச்சயம் ஏதாவது சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பலரும் கருதி வருகின்றனர்.

LOTTERY, DOGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்