'சீனாவுக்கு ஆதரவாகவே பேசியதால்'... 'அதிபர் ட்ரம்ப் தந்த அதிர்ச்சி'... 'வருந்திய உலக சுகாதார அமைப்பு'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

WHO என்ற உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதியை நிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து, அந்த அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

கொரோனா விஷயத்தில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி வந்தன. இதையடுத்து, கொரோனா வைர​ஸ் பிரச்சனையை அரசியலாக்கினால் ​பிணக்குவியல்களை காண நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் சுவிட்சர்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய WHO அமைப்பின் பொது இயக்குநர் ​டெட்ராஸ்,‘மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது தன் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி கவலைப்படப்போவதில்லை எனவும், சீன ஆதரவு நிலைப்பாடு என்ற ட்ரம்பின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும், கொரோனா வைரஸ் பிரச்னையை அரசியலாக்கினால் மேலும் பிணக்குவியலை உலகம் காண நேரிடும்’ எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதி நிறுத்திவைத்துள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த செயலுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசேஸ், ‘அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பின் நீண்டகால மற்றும் உண்மையான நண்பனாக திகழ்ந்து வருகிறது. அது எப்போதும் தொடரும் என்று நம்புகிறோம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது வருத்தம் அளிக்கிறது.

கொரோனா நேரத்தில் மக்களின் நலனைக் கொண்டு செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்கா நிதியை நிறுத்துவதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று ஐ.நா. கவலை தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவுக்கு சீனாவும் கவலை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்