கொரோனாவால் 'நிலைகுலைந்துள்ள' நாட்டில்... லாக் டவுனை 'தளர்த்த' கோரி 'போராடிய' மக்களால் 'பரபரப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஊரடங்கை தளர்த்த கோரி மக்கள் பலர் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
கொரோனாவால் உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்புக்கு சமூகப் பரவல் அதிகரித்ததே காரணமாகக் கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கால் அந்நாட்டின் பொருளாதாரமும் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வேலை வாய்ப்பு குறைந்து, சுமார் 22 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஊரடங்கை தளர்த்தி தங்களை வேலைக்குச் செல்ல அனுமதிக்குமாறு மக்கள் பலர் நேற்று சாலையில் இறங்கி துப்பாக்கியுடன் கோஷமிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பிறகு அவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றிப் பேசியுள்ள மெக்ஸிகன் ஆளுநர் கிரேசென் விட்மெர், "இந்த மாகாணத்தின் சிறு பகுதி மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தினர். வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட பயம் கலந்த பதற்றத்தில் தான் அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மக்கள் வெளியில் வந்து ஒன்றுகூடி போராட்டம் நடத்தியுள்ளதால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதே இதில் சோகமான விஷயம்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “டிக்டாக் மோகத்தால் சிக்கிய இந்த இளைஞரை நியாபகம் இருக்கா?”.. ‘இப்பவும் டிக்டாக்கை விடல.. ஆனா’.. நெகிழவைத்த காவல் ஆய்வாளர்!
- "என் புருஷன கடைசியா ஒரு தடவ பாக்கணும்"... 2000 'கி.மீ' தொலைவில்... உயிரிழந்த "கணவர்"... கலெக்டர் செய்த உதவி!
- "இனிமே சரிப்பட்டு வராது"... "பஸ், ட்ரெயின நம்பி பிரயோஜனமில்ல"... நீட்டித்த 'ஊரடங்கு'... 'சைக்கிளில்' ஊருக்குக் கிளம்பிய தொழிலாளர்கள்!
- '28 வருடங்களில்' இதுதான் முதல்முறை... அடிமேல் 'அடிவாங்கும்' சீனா... ஏன் இப்டி?
- இனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி!... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...
- 1. இந்தியாவால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! 2. இந்தியாவில் 60% கொரோனா பாதிப்பு நோயாளிகள் இந்த 5 மாநிலங்கள் சேர்ந்தவர்கள்தான்!
- தமிழ்நாடு: “சாப்பாடு இல்ல.. காலில் செருப்பு கூட இல்ல”.. 2 நாட்கள்... 170 கி.மீ நடந்தே வந்த 7 வயது சிறுவன்.. உருக்கும் சம்பவம்! வீடியோ!
- ‘மேலும் 56 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 1,323 ஆக உயர்வு!’.. ‘ஒரே நாளில் குணமடைந்த 103 பேர்!’.. முழு விபரம் உள்ளே!
- 'இந்தியாவில்' பரிசோதிக்கப்படும்... 'எத்தனை' பேரில் ஒருவருக்கு பாதிப்பு?... 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடுகளின் 'நிலவரம்' என்ன?...
- ஊரடங்கால் 'சென்னை'யில் நடந்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!