'எத்தனை' ஆயிரம் வரை உயிரிழப்பு 'உயரும்?'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு?... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 70,000 பேர் வரை உயிரிழக்கலாம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 30,65,176 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 9,22,862 பேர் குணமடைந்துள்ளனர். 2,11,631 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கையில் அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ட்ரம்ப், நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் தன்னையே அதிபராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், வியட்நாம் போரில் மொத்தமாக அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 58 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆறே வாரங்களில் அதை விட அதிக அமெரிக்கர்களின் உயிர்களைப் பறிகொடுத்தவர் மீண்டும் அதிபராகத் தகுதி உள்ளவரா எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள அதிபர் ட்ரம்ப், "அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு 70,000 பேர் வரை உயிரிழக்கலாம். முன்னதாக 22 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 60 முதல் 70 ஆயிரத்துக்குள் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருக்கிறோம். இருப்பினும் நாம் சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாம் நிறைய சிறந்த முடிவுகளை எடுத்துள்ளோம். அதில் மிக முக்கியமானது எல்லைகளை அடைத்தது. சீனாவிலிருந்து வந்தவர்களுக்குத் தடை விதித்தது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்