நாங்க 'விசாரணைய' இன்னும் தீவிரப்படுத்துவோம்...! 'எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது...' கொரோனா 'அங்க' இருந்து தான் பரவிச்சு...! - அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் உகான் பகுதியில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்பட்டது. தற்போதய கொரோனா வைரஸ் அனைத்து உலக நாடுகளுக்கும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை அழித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியது முதல் இவை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவியதா? இல்லை சீன அரசே பரப்பியாத என்ற சந்தேகம் வலுவடைந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் உளவுத்துறை ஆய்வில், சீனாவின் உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் பல ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

வால் ஸ்ட்ரீட் ஜெர்னல், அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில், சீனாவின் உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (WIV) இன் மூன்று ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க உளவுத் துறை புதிதாக அறிக்கையின்படி, ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளியே பரவியதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

அதோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்க அரசு இந்த விசாரணையை தீவிரப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்