'எங்க அட்டாக் ரொம்ப உக்கிரமா இருக்கும்'... 'தாலிபான்கள் போட்ட தண்டனை லிஸ்ட்'... 'நாங்க சும்மா விட மாட்டோம்'... கொந்தளித்த அமெரிக்கா!
முகப்பு > செய்திகள் > உலகம்தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரங்களைத் தாலிபான்கள் வெளியிட்டு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தார்கள்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாலிபான்கள் ஆட்சியிலிருந்த போது திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரின் கை, கால்களைத் துண்டிப்பது, பொது இடத்தில் தூக்கில் போடுவது எனக் கேட்டாலே பதறவைக்கும் அளவுக்கு அவர்களின் தண்டனைகள் கொடுமையாக இருந்தது.
இந்நிலையில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாலிபான் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவர் முல்லா நூருதீன் துராபி, தவறு செய்பவர்களுக்கு மீண்டும் பழைய தண்டனை முறை கொண்டு வரப்படும் என அதிரடியாக அறிவித்திருந்தார். அப்போது பேசிய அவர், ''தாலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது தவறு செய்பவர்களுக்கு மைதானத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதுவும் குற்றத்திற்கு ஏற்ப கை, கால்களைத் துண்டிக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டன.
எங்கள் தண்டனை முறைகளைப் பலர் கிண்டல் செய்வதோடு கேள்வியும் கேட்கிறார்கள். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே. எங்கள் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை. நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம். குரானின் அடிப்படையில் நாங்கள் எங்களின் சட்டதிட்டங்களை வகுக்கிறோம்'' எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள அமெரிக்கா, ''தாலிபான்கள் ஷரியத் சட்டத்தின் கீழ் தான் சட்டங்களை வகுத்திருப்பதாகக் கூறிக்கொண்டு, வழங்கப்படும் தண்டனைகளை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. தாலிபான்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் அமெரிக்கா, ஆப்கானில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகளின் நலன் காக்க நிச்சயம் துணை நிற்போம். அதே நேரத்தில் தாலிபான்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டால் அதை அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது'' எனக் கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாவம் தாலிபான்...! தயவு செஞ்சு 'அப்படி' மட்டும் பண்ணிடாதீங்க...! 'அவங்களுக்கு ஏற்கனவே ரொம்ப பிரஸர்...' - ஆதரவுக் குரலை 'ஜி-20' மாநாட்டில் பதிவு செய்த நாடு...!
- 'சரிப்பா, லிஸ்ட் சொல்றேன் எழுதிக்கோங்க'... 'தப்பு பண்றவங்களுக்கு என்னென்ன தண்டனை'... 'கேட்கும் போதே அலறுதே'... தாலிபான்கள் அதிரடி!
- 'இஷ்டம் போல செய்யுங்க...' உங்கள யாரு கேப்பா...? 'ஆனா எங்களால சகிச்சிட்டு இருக்க முடியாது...' - தாலிபான்களுக்கு எதிராக '70 ஆசிரியர்கள்' சேர்ந்து எடுத்த 'அதிரடி' முடிவு...!
- 'ஒரே செகண்ட்ல என் அதிகாரம், அந்தஸ்து எல்லாமே போச்சு...' 'திடீர்னு ஆபீஸ் உள்ள வந்தாங்க...' 'அப்படி' சொன்னதும் என் நெஞ்சே 'வெடிச்சு' போச்சு...! - யார் இந்த ஹக்கானிகள்...?
- 'சார், அந்த பார்சல் From அட்ரஸ் செக் பண்ணுங்க'... 'ஆப்கானிஸ்தான்னு போட்டு இருக்கு'... 'பதறிய அதிகாரிகள்'... சாக்குப்பைக்குள் காத்திருந்த மெகா சம்பவம்!
- '20 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா செதுக்கி கொண்டு வந்தாங்க'... 'போச்சா, ஒரே அறிவிப்புல எல்லாம் போச்சு'... 'இந்த பாவம் சும்மா விடுமா'?... பொங்கியெழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
- அதெல்லாம் 'நீங்க' சொல்லாதீங்க...! 'என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்...' 'எங்கள'லாம் கண்ட்ரோல் பண்ண 'உலகத்துலையே' ஆளு கிடையாது...! - சீறிய தாலிபான்கள்...!
- இந்த 'ரண' களத்துலையும் ஒரு கிளுகிளுப்பு...! 'ஒரு கையில துப்பாக்கி...' 'மறு கையில குழந்தைங்க...' எல்லாரும் சேர்ந்து 'எங்க' கிளம்பிட்டாங்க...? - வைரலாகும் புகைப்படங்கள்...!
- உலகின் சக்தி வாய்ந்த '100 நபர்கள்' பட்டியலில் 'அவர்' பெயரா...? 'ரொம்ப சைலன்டான மனுஷன்...' 'வெளியவே வர மாட்டாரு...' - 'டைம்' இதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு...!
- 'இங்க ஒண்ணு பேசுறது...' 'வெளிய போய் வேற ஒண்ணு சொல்றது...' 'இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுங்க...' 'அஷ்ரஃப் கனி அன்னைக்கு 'என்ன' சொன்னார் தெரியுமா...? - கடுப்பில் அமெரிக்கா...!