VIDEO: 'ரோட்டுல பெரிய பெரிய வண்டிகள் போய் பார்த்துருப்போம்...' 'ஒரு வீடே நகர்ந்து போய் பார்த்துருக்கீங்களா...?! - மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் பாரம்பரியமாக கட்டப்பட்ட வீட்டை பாதுகாக்க வீட்டையே அடியோடு தூக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் 139 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கலை வேலைப்பாடுகள் கொண்ட பழமையான வீடு, அடியோடு பெயர்க்கப்பட்டு 482 மீட்டர் தொலைவிற்கு அப்பால் காலியான இடத்திற்கு நகர்த்தப்பட்டது.

                                    

இந்த வீடுகள் நகரின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவில்லை என்பதால் அந்த பாரம்பரிய வீடுகளை இடிக்காமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அலேக்காக தூக்கி நகர்த்தியுள்ளார்கள். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

                                

பிரமாண்ட சக்கரங்கள் கொண்ட டிரக்கின்மீது வீடு வைக்கப்பட்டு சாலையில் நகர்த்தி செல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த வீடுகளை நகர்த்த மட்டும் நம் இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.

                            

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்