மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் உலக நாடுகள்.. ஆனா இந்த நாட்டுல மட்டும் எல்லாம் ‘தலைகீழாக’ போய்ட்டு இருக்கு.. மீண்டும் ‘பயமுறுத்தும்’ எண்ணிக்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த மாதத்தை விட 600 சதவீதத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் எண்ணிக்கை 570 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் வென்டிலேட்டர்களில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 102 ஆக உயர்ந்துள்ளது. இது ஜூலை 4-ம் தேதி 8 ஆக இருந்தது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. டெல்டா வகை வைரஸால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது பற்றியும்  குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மாகாண அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

அமெரிக்காவில் புதிய நோய்த்தொற்றுகள் சராசரியாக தினசரி 1 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளன. 6 மாதங்களுக்கு முன்பு குளிர்காலத்தில் இருந்ததை விட தற்போது கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் வாராந்திர பாதிப்பு 750,000-யை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்