கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ‘புதிய’ மைல் கல்.. உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த அமெரிக்கா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்கா அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தங்களது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் இன்று அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. அப்படி இருக்கையில் அமெரிக்காவில் 12 முதல் 15 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் தடுப்பில் புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்