'முன்பின்' தெரியாதவரை 'ஒருநாள்' தங்கவைத்த 'இளம் பெண்'!.. 'இரவில்' கண்விழித்து 'பார்த்தபோது' காத்திருந்த 'அதிர்ச்சி'!
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கியில் இருந்து வடக்கு லண்டனுக்கு வந்த செவ்தலின் அடான்சவ் என்கிற 32 வயது இளைஞரை, தனக்குத் தெரிந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரின் பரிந்துரையின் பேரில், இளம் பெண் ஒருவர், ஒரு இரவுக்கு மட்டும் தனது வீட்டில் தங்கவைத்துவிட்டு, தானும் அன்று இரவு உறங்கினார்.
ஆனால் பாதிதூக்கத்தில் கண்விழித்து பார்த்தபோது, அந்த இளைஞர் கத்தியுடன் நின்றுகொண்டிருந்ததோடு, தனது வாயையும் இறுக்கமாக மூட முயற்சித்ததால் அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் கத்தினால் கழுத்தை அறுத்துவிடுவதாக, அப்பெண்ணை மிரட்டிய செவ்தலின், அப்பெண்ணை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
ஆனால் எப்படியோ அவரிடமிருந்து தப்பியோடிய அப்பெண், தனது நண்பர் மூலம் காவல்துறையினரிடத்தில் அளித்த புகாரின் பேரில், அங்கு விரைந்த போலீஸார் செவ்தலினை கைது செய்தனர். பின்னர் தொடர் நீதிமன்ற விசாரனையில், தன் மீதான குற்றச்சாட்டினை மறுத்து வந்த செவ்தலின், அப்பெண் தாக்குதலுக்குள்ளான தடயவில் சான்றுகள் ஒப்படைக்கப்பட்ட பின்னரே, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லண்டன், வுட் கிரீன் க்ரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சசிகலா விடுதலை எப்போது?... ஆர்டிஐ கேள்விக்கு அதிர்ச்சி 'பதிலளித்த' சிறை நிர்வாகம்!
- "இத அப்பவே பண்ணியிருந்தா.. கொரோனா இந்த ஆட்டம் ஆடியிருக்காது!".. கொந்தளிக்கும் யுகே விஞ்ஞானி!
- 'பட்டப் பகலில்'.. 'பார்க்கில்'.. '7 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்'!.. 'பெண்' செய்த 'கொடூரச்' செயல்!
- "ரொம்ப நல்ல பொண்ணு.. அவளுக்கா இப்படி நடக்கணும்!".. இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு '2 சூட்கேஸில்' சடலமாக மீட்பு!
- குழந்தைகளுக்கு 'கொரோனா' பரிசோதனை செய்தபோது தெரியவந்த 'ஷாக்' ரிப்போர்ட்.. 'உறைந்துபோய்' நிற்கும் 'உலக சுகாதார மையம்'!
- ‘அந்த ஜெயிலுக்கு மட்டும் அனுப்பாதீங்க’.. நீதிமன்றத்தில் வாதிட்ட ‘நீரவ் மோடி’.. அப்படி என்ன காரணம்..?
- மிக 'மோசமான' பாதிப்பிலிருந்து கொரோனா 'இல்லாத' நகரம்!... இன்னும் '2 வாரங்களில்'... வெளியாகியுள்ள 'புள்ளிவிவரம்'...
- “உலகம் முழுவதும் 4 மில்லியனை தொட்ட கொரோனா!”.. அமெரிக்காவில் 80 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை!
- 'இது எங்க போய் முடியுமோ'... 'கணக்கில் வராத இறந்தவர்கள்'... 'புதிய லிஸ்டை வெளியிட்ட நாடு'... நொறுங்கி போன மக்கள்!
- 'வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!'.. கொரோனாவை வென்ற பிரதமர் போரிஸ்!.. நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது எப்படி?