'ரோபோவாக மாறிய மாணவர்கள்...' 'இல்லனா, கொரோனா வைரஸ் பரவிடும்...' படிக்காமல் பட்டம் வாங்கிய 'நியூ மீ' ரோபோ...! வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அச்சத்தால் ஜப்பானில் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ரோபோக்கள் ஆக மாற்றப்பட்டு பட்டம் வழங்கிய வீடியோ உலக அளவில் பரவி வைரலாகி வருகிறது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் எந்த உலக நாடுகளையும் விட்டுவைக்காமல் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் தங்கள் நாடுகளில் லாக் டவுனை அறிவித்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தி வருகிறது.
இதனிடையில் ஜப்பானில் business breakthrough என்னும் பல்கலைக்கழகத்தில் ரோபோக்கள் மாணவர்களாகிய மாறி தங்களது பட்டங்களை பெற்றுக்கொண்டன.
முதலில் கொரோனா வைரஸ் அச்சத்தால் பட்டமளிப்பு விழாவை ரத்து செய்ய எண்ணிய பல்கலைகழகம், பின் பிபிடி பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறையின் டீன் பேராசிரியர் சுகோ யானகா அவர்களின் யோசனையில் 'நியூ மீ' என்னும் ரோபோக்களை பயன்படுத்தி இந்த பட்டமளிப்பு விழாவை தொடங்கியுள்ளனர்.
விழாவில் ரோபோக்களின் முகங்களுக்கு பதிலாக ஐபாட்கள் பொருத்தப்பட்டன. மாணவர்கள் வீடுகளில் இருந்தே அவர்களது ஐபாட்களின் மூலம் லாகின் செய்து கொள்கின்றனர்.
இதன் மூலம் விழாவில் பங்குகொண்ட ரோபோக்கள் பாதி இயந்திரங்களாகவும், தலைப்பகுதியில் மாணவர்களின் முகங்களுடன் பங்கேற்றனர்.
ரோபோக்கள் ஒவ்வொன்றாக தங்கள் பட்டத்தை பெற மேடைக்குச் சென்று தங்களது டிப்ளமோ பட்டங்களை வாங்கி வந்தன. அங்கிருக்கும் ஆசிரியர்கள் ஆரவாரமாக கைத்தட்டி மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை ஊட்டும் விதமாகவும் இருந்தது.
இந்த பட்டமளிப்பு விழாவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதை முன் மாதிரியாக கொண்டு ஜப்பானில் சில கல்லூரிகளும், பள்ளிகளும் இந்த முறையில் தங்களது நிறைவு விழாவை நடத்த திட்டமிட்டு கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் பரபரப்பு!... கொரோனா சிகிச்சை வார்டில்... 'ரோபோ'க்கள் அறிமுகம் செய்ய ஏற்பாடு!... என்ன காரணம்?
- 'வணக்கம் டா மாப்ள!... நீட் தேர்வுக்கு படிக்கிறயா?.. நான் உனக்கு சொல்லி தரேன்!'... மாணவர்களை மிரளவைத்த கண்டுபிடிப்பு!... சென்னை பொறியாளரின் 'நிஜ' எந்திரன்!
- ‘மருத்துவர்களையும் விட்டுவைக்கல இந்த கொடூர கொரோனா!’.. ‘இனி நாம பரிசோதிக்கக் கூடாது!’.. ‘புதிய முயற்சியில் களமிறங்கிய சீன மருத்துவர்கள்!’
- 'அவங்களும் லீவ் இல்லாம வொர்க் பண்ணிட்டே இருக்காங்க, அதனாலதான்...' 'நர்ஸ் மாதிரி தான் நல்லாவே பார்த்துக்குறாங்க...!' கொரோனா தொற்று ஏற்படுவதால் நர்ஸ் ரோபோக்கள்...!
- "ஐ... ரோபோ பேசுது"... பேரு வியோமித்ரா...இஸ்ரோவுக்கு போனா கண்டிப்பா மீட் பண்ணுங்க... தலைவி தான் அடுத்து விண்வெளிக்கு போறாங்க...
- ’இனி எல்லாம் ஸ்பீடா நடக்கும்’.. 100 ரோபோக்களை வேலைக்கு வைத்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம்!