இப்படியொரு 'ராக்கெட்' லாஞ்சரா...! 'இனி எவனாச்சும் நம்மள நெருங்கட்டும், அப்புறம் இருக்கு...' - வயித்துல புளிய கரைக்குற மாதிரி 'மாஸ்' சம்பவம் செய்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியாவிற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வடகொரியா கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உலகிலேயே மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏவுகணையை விண்ணில் செலுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக எந்த ஏவுகணை பரிசோதனையும் நடத்தாத வடகொரியா தற்போது செய்துள்ள செயல் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியா சோதனை செய்த இந்த நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வட கொரிய அரசு, 'நாம் இப்போது பரிசோதனை செய்துள்ள ஏவுகணை தண்ணீருக்கு மேல் 1500 கிலோமீட்டர் பயணம் செய்தது. இந்த ஏவுகணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூல ஆயுதம். இந்த ஏவுகணை நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மற்றொரு பயனுள்ள தடுப்பு வழிமுறை' எனக் குறிப்பிட்டுள்ளது.
வடகொரிய ஆய்வாளர்களும் அவர்கள் சோதனை செய்த ஏவுகணை குறித்து குறிப்பிட்டுள்ளனர். அதில், 'இது நம் வடகொரிய நாட்டின் முதல் நீண்ட தூர பயண ஏவுகணை, அதோடு இது அணு ஆயுதத்தைக் கொண்டு செல்லக் கூடியது' எனவும் தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அமெரிக்க ராணுவமும், 'வடகொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலானது' என தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அங்க' வச்சு என்ன 'பேசினோம்'னு மறந்துட்டீங்க இல்ல...? 'இதெல்லாம்' நல்லாவா இருக்கு...? - தாலிபான்கள் கடும் கண்டனம்...!
- பாய்ந்து வந்த ஏவுகணை...! 'டக்குனு அலெர்ட் ஆன நாடு...' இந்த 'வேலைய' செஞ்சது கண்டிப்பா 'அவங்க' தான்...! - கரெக்ட்டா 'அந்த இடத்த' டார்கெட் பண்ணிருக்காங்க...
- என்னங்க இது அநியாயம்...? 'நம்ம ஊர்ல ரோட்டு சைடுல சும்மா கெடக்கும்...' 'அத போய் ரூ.1,800-க்கு ஆன்லைன்ல விக்குறாங்க...' - அதுக்கு புதுசா 'பெயரு' கூட வச்சிருக்காங்களாம்...!
- ஒரு 'ஏவுகணை' இத்தனை 'வேலை' செய்யுமா...? 'அசுரத்தனமான பவர்...' 'அலற விடும் நாடு...' - 'அணு' ஆயுதத்தையே அடிச்சு நொறுக்கிடும்...!
- 'என்ன' செய்யணுமோ 'அத செஞ்சிட்டு' தான் கிளம்பியிருக்கோம்...! தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் வாய்ப்பே இல்ல ராஜா...! - 'நாங்க'லாம் அப்போவே அப்படி...!
- 'ஜன்னலை உடைத்து... வீட்டுக்குள் விழுந்து வெடித்த ஏவுகணை'!.. காபூலில் தீவிரவாதிகளின் 'அடுத்த' பயங்கர ஸ்கெட்ச்!
- அய்யோ, 'மறுபடியும்' ஆரம்பிச்சிட்டாங்களா...? 'சாட்டிலைட்' புகைப்படத்தில் தெரிய வந்துள்ள 'அதிர' வைக்கும் தகவல்...! - உறுதிப்படுத்திய ஐ.நா...!
- ஏன்டா... எப்போவும் 'எங்க' கிட்டயே வந்து 'சரசம்' பண்றீங்க...? 'ஒரு அளவுக்கு தான் பொறுக்க முடியும்...' - கோபத்தில் 'கொந்தளித்த' சீனா...!
- இது பச்சை துரோகம்...! இது 'continue' ஆச்சுன்னா நாங்க சும்மா விடமாட்டோம்...! 'நாங்க ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணியாச்சு...' - கடும் 'எச்சரிக்கை' விடுத்த கிம் ஜாங் உன்னின் சகோதரி...!
- H-1B விசா விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்...! 'ஆனா இந்த விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா பண்ணனும்...' - அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்டுள்ள தகவல்...!