'என்ன நடக்குது அமெரிக்காவில்'?... 'ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி'...நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும், ஆயிரத்து 919 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் 209 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 41 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 47 ஆயிரத்து 912 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் சீனாவில் கோர தாண்டவம் ஆடிய கொரோனா, தற்போது அமெரிக்காவை தும்சம் செய்து வருகிறது. அங்கு வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பலவித முயற்சிகள் எடுத்தும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், மருத்துவர்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். தற்போது  ஒரே நாளில் புதிதாக 28 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 612 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே நேற்று மட்டும் உயிரிழந்த ஆயிரத்து 919 பேரை சேர்த்து, அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 3 இடத்தில் உள்ளது. பல்வேறு மருத்துவ வசதிகள் நிறைந்த அமெரிக்காவில் இத்தகைய சூழல் நிலவுவது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்