விமானத்தில் இருந்து கிளம்பிய தீப்பொறி.. உடனடியா தரையிறக்கப்பட்ட விமானம்.. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் புறப்பட்ட சற்று நேரத்தில் விமானத்தில் இருந்து தீப்பொறி பறந்ததால், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
கோளாறு
அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் நெவார்க்கில் இருந்து டேக் ஆஃப் போது ஹைட்ராலிக் அமைப்பிலிருந்து தீப்பொறிகள் மற்றும் பாகங்கள் சில விழ ஆரம்பித்ததால் விமானம் மீண்டும் நெவார்க் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இயந்திர கோளாறு காரணமாக இது நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விமானத்தில் இருந்து தீப்பொறிகள் தெறித்துவிழும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து பிரேசிலின் சாவோ பாலோவிற்கு கிளம்பிய விமானம், நியூயார்க்குக்கு 70 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்து தீப்பொறிகள் எழுவதை விமான குழுவினர் பார்த்திருக்கின்றனர். அதன்பிறகு விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளது. பயணம் துவங்கிய ஒன்றரை மணிநேரத்தில் விமானம் மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது.
ஆய்வு
விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த விமானத்தில் பயணித்தவர்கள் மாற்று விமானங்கள் மூலமாக பிரேசில் அனுப்பிவைக்கப்பட்டனர். யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் போயிங் 777 ரக விமானங்களில் இதுவரை 25 விமானங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்திருந்தது ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA).
இதுகுறித்து பேசியுள்ள அந்த விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,"எங்கள் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த நபர்கள் வேறு விமானம் மூலமாக பயணத்தை தொடர்ந்தார்கள். இதுவரையில் 10 விமானங்களில் ஆய்வுகளை முடித்துவிட்டோம், அடுத்த இரண்டு வாரங்களில் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மற்றவற்றை சேவைக்கு திரும்ப அனுப்ப FAA உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." என்றார். விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அதில் இருந்து தீப்பொறிகள் பறந்தததால் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read | வரதட்சணை விவகாரம்.. வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பம்.. கடப்பாரையால் பதில் சொன்ன மனைவி..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்