பூமில இருந்து உருவாகும் வினோத சத்தம்? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆடியோ.. பரபரப்பு பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகமை வெளியிட்டுள்ள ஒரு பதிவு உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Also Read | ட்விட்டரில் Blue Tick -க்கு பணம் கட்டணுமா?.. வெடித்த சர்ச்சை.. எலான் மஸ்க் கொடுத்த பரபர பதில்..!
விண்வெளி எப்போதுமே பல்வேறு விடை காணமுடியாத விசித்திரங்களை தன்னிடத்தே கொண்டது. நாள்தோறும் பல்வேறு விதமான புதிய புதிய தகவல்கள் விண்வெளி பற்றி வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகமை (European Space Agency - ESA) தற்போது வெளியிட்டிருக்கும் பதிவு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, பூமியின் காந்த புலத்தின் சத்தத்தை வெளியிட்டிருக்கிறார்கள் ESA -வை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் நம்மால் பூமியின் காந்த புலத்தை பார்க்க முடியாது. அதேபோல, அவற்றிற்கு என சத்தம் ஏதுமில்லை. இவை காஸ்மிக் ரேடியேஷனில் இருந்து பூமியை பாதுகாக்கும் வேலையை செய்து வருகின்றன. பொதுவாக சூரியனில் இருந்து வரும் solar flares எனப்படும் அலைகளில் இருந்து இந்த காந்தப் புலம் பூமியை காக்கின்றன.
காந்தப் புலத்தை ஆய்வு செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ESA-வின் ஸ்வர்ம் செயற்கைக்கோள் பூமியை சுற்றியுள்ள காந்தப் புலத்தை அளவிட்டு வருகிறது. இந்நிலையில், டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த காந்த சமிக்ஞைகளை ஒலி வடிவமாக மாற்றியிருக்கிறார்களாம். முதன்முதலாக கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி இந்த சத்தத்தினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
பூமியின் மையப்பகுதி, மேன்டில், மேலோடு மற்றும் பெருங்கடல்களில் இருந்து உருவாகும் காந்த சமிக்ஞைகளை துல்லியமாக அளவிடுவதன் மூலம் காந்தப்புலம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள ஸ்வர்ம் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகமை அதில்,"ஹேப்பி ஹாலோவீன். நாங்கள் ஸ்வர்ம் செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட பூமியின் காந்த புலத்தின் அச்சமூட்டும் சத்தத்துடன் ஹாலோவீனை கொண்டாடுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. அதனுடன் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆடியோவையும் ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | 5 நாளைக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.. ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்.. முழு விபரம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவை புரட்டிப்போட்ட புயல்.. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட நாசா.. யம்மாடி என்ன இப்படி இருக்கு..!
- இனி விண்வெளிக்கே டூர் போகலாம்.. சீனா போட்ட பிளான்.. எல்லாம் சரி அந்த டிக்கெட் விலையை கேட்டா தான் தலை சுத்துது..!
- இவ்வளவு நாளா இப்படி ஒன்ன தான் தேடிட்டு இருந்தாங்க.. வெளிச்சத்துக்கு வந்த மில்லியன் வருஷ மர்மம்..!
- விண்வெளியில் விளைந்த அரிசி.. சாதித்து காட்டிய சீன விஞ்ஞானிகள்.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்!!
- விண்வெளி'ல இருந்து பாக்குறப்போ.. பூமி'ல தெரிஞ்ச பிரகாசமான புள்ளி.. "அது எந்த இடம் தெரியுமா?"
- 18 வருஷத்துக்கு அப்பறம் வானில் நடக்க இருக்கும் அற்புதம்.. இனிமே 2040 ல தான் இப்படி நடக்குமாம்..!
- விண்வெளி வரலாற்றுல இப்படி ஒரு ரிஸ்க்-அ யாரும் எடுத்ததில்லை.. செம்ம தில்லுப்பா இவருக்கு.. நாசா பகிர்ந்த வைரல் புகைப்படம்..!
- திடீர்னு வானத்துல தோன்றிய சுழல் வடிவம்.. "ஒருவேளை ஏலியன்களின் பாதையா இருக்குமோ?" குழம்பிப்போன மக்கள்.. விஞ்ஞானிகள் சொல்லிய வியக்கவைக்கும் காரணம்..!
- "ஒரு செகண்ட்-ல பூமிய விழுங்கிடும்..நெனச்சத விட 500 மடங்கு பெருசு".. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய Black Hole.. திடுக்கிட வைக்கும் தகவல்கள்..!
- இன்னொரு கேலக்சியிலிருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்.. "இதோட 2வது டைம்".. அனுப்புறது யாரு? குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!