ரஷ்யாவுக்கு புதிய நெருக்கடி?.. 11 வருஷத்துக்கு அப்புறம் ஐநா வைத்த செக்.. ஆட்டம் சூடுபிடிக்குது!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதனை உக்ரைன் நாடு வரவேற்பதக தெரிவித்து உள்ளது.

Advertising
>
Advertising

இலங்கை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ராஜபக்ஷே எடுத்த முக்கிய முடிவு.. மக்கள் போராட்டம்..!

போர்

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் தேசம் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டில் சிறப்பு ராணுவ ஆப்பரேஷனை நடத்த அனுமதி கோரி ரஷ்ய பாராளுமன்றத்தில் அதிபர் புதின் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பாராளுமன்றமும் அனுமதி கொடுத்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் விளாடிமிர் புதின்.

இதனை அடுத்து உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் காரணமாக இதுவரையில் 30 லட்சம் மக்கள் அண்டை தேசங்களில் தஞ்சமடைந்துள்ளதாக உக்ரைன் கூறிவருகிறது.

தீர்மானம்

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கீவ், புச்சா ஆகிய பகுதிகளில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துவந்தன. இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவந்தது அமெரிக்கா .

இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்த நிலையில் 93 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 24 நாடுகள் எதிராக வாக்களித்தன. இதன் மூலம் இத்தீர்மானம் நிறைவேறியது. இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட 58 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான லிபியாவை சஸ்பெண்ட் செய்திருந்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில். அதன்பிறகு இப்போது ரஷ்யாவை தற்காலிகமாக கவுன்சிலில் இருந்து நீக்கியுள்ளது ஐநா.

ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் வெற்றியடைந்திருப்பதை உக்ரைன் வரவேற்பதாக அறிவித்து உள்ளது. அதேபோல, உக்ரைனில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு என உலக நாடுகள் தெரிவித்துள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு கூறியுள்ளார்.

வெளியேறிய இந்தியா

நேற்று ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் வெளியேறியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்த்து இதுவரையில் 8 தீர்மானங்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதில் அனைத்து தீர்மானங்களிலும் வாக்களிக்காமல் இந்தியா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கொடுத்த பணத்துக்கு கணக்கு காட்டாததால் கோபம்.. மகனை பழிவாங்க அப்பா செஞ்ச திடுக்கிடும் காரியம்..!

UN, RUSSIA, SUSPEND, HUMAN RIGHTS COUNCIL, RUSSIA UKRAINE CRISIS, UKARAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்