11 நாடுகள் சேர்ந்து நின்னு எதிர்த்தா பயந்துருவோமா? ஐநா-வில் போடப்பட்ட தீர்மானம்.. சுக்குநூறாக உடைத்தெறிந்த ரஷ்யா

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று கூட்டம்  நடத்தி தீர்மானம் எடுத்துள்ளது.

Advertising
>
Advertising

'WORLD WAR Z' உக்ரைனை தாக்கும் ரஷ்யா பீரங்கிகளில்.. மிகப் பெரிய ரகசிய குறியீடு.. அதிர வைக்கும் பின்னணி!

ரஷ்யா, கடந்த இரண்டு நாள்களாக உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்தாலும், ரஷ்யா கண்டுகொள்வதாக இல்லை. தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கி, தாக்குதலை நடத்திவருகிறது.

போரை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது:

நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 'தான் இன்னும் உக்ரைனில்தான் இருக்கிறேன்’ என வீடியோ வெளியிட்டார். மேலும், ரஷ்யாவின் முதல் இலக்கு தானும் தனது குடும்பத்தினரும் தான். உலக நாடுகள் போரை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது' என வேதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடத்தி இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையிலிருந்தும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளிருந்தும் அனைத்து ராணுவப் படைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், பேசும் போது, 'நமது அடிப்படைக் கொள்கைகள் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல் மிகவும் தைரியமானது, மிகவும் வெட்கக்கேடானது, அது நமது சர்வதேச அமைப்பை அச்சுறுத்துகிறது' எனக் கூறினார்.

இந்தியா மிகவும் கவலை:

அதோடு, இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், 'உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சம்பவங்களால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. மனித உயிர்களை விலையாக வைத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது. சமகால உலகளாவிய ஒழுங்கு ஐக்கிய நாடுகளின் சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கொள்கைகளை மதிக்க வேண்டும்:

உக்ரைனில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்களை உள்ளடக்கிய இந்திய சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் ஆழ்ந்த அக்கறைகொண்டிருக்கிறோம். அனைத்து உறுப்பு நாடுகளும், ஆக்கபூர்வமான வழியைக் கண்டுபிடித்துத்தான் இந்தக் கொள்கைகளை மதிக்க வேண்டும்.

இந்தியா புறக்கணிக்க முடிவு:

கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதற்கான ஒரே பதில் உரையாடல் மட்டுமே, இருப்பினும் இந்த நேரத்தில் அது அச்சுறுத்தலாகத் தோன்றலாம். அரசின் ராஜாந்திர வழிகள் கைவிடப்பட்டது வருத்தம் அளிக்கிறது. நாம் அதற்குத் திரும்ப வேண்டும். இந்த அனைத்து காரணங்களுக்காகவும், இந்தத் தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது' என்றார்.

சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஜாங் ஜுன் பேசுகையில், 'அனைத்து மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம், உக்ரைன் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பாலமாக மாற வேண்டும்' எனக் கூறினார்.

ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது உறுப்பு நாடுகள் வாக்களித்தன.

உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்யாவை கண்டித்து ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ஆதரவு நாடுகள்:

அமெரிக்கா
பிரிட்டன்
பிரான்ஸ்
நார்வே
அயர்லாந்து
அல்பேனியா
காபோன்
மெக்சிகோ
பிரேசில்
கானா
கென்யா

வாக்கெடுப்பை புறக்கணித்தது நாடுகள்:

சீனா
இந்தியா
ஐக்கிய அரபு

இதன் மூலம் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் முடிவை எடுப்பதாகக் தெரிவித்திருக்கிறது.15 நாடுகளில், 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தும், ரஷ்யாவுக்கு எதிரான இந்தத் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. காரணம், ரஷ்யா தனக்கு உள்ள 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

உலகை ஆளப்போகும் விளாடிமிர் புதின்.. யாராலும் தடுக்க முடியாது.. முன்கூட்டியே கணித்த பாபா வங்கா பாட்டி

UN COUNCIL CONVENES

மற்ற செய்திகள்