'தம்பி, பெத்த அம்மாகிட்டேயே மறைச்சிட்டல'... 'அப்போ '750 கோடி' ஜீவனாம்சம் கொடு'... விவாகரத்து வழக்கில் பட்டையை கிளப்பிய தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நீதிமன்றத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வரும் என அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் Farkhad Akhmedov. இவருக்குத் திருமணமாகி Temur Akhmedov என்ற மகன் உள்ளார். இந்த சூழ்நிலையில் கணவன், மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிவது என முடிவு செய்து விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுகினார்கள். விவாகரத்தும் இருவருக்குக் கிடைத்தது.

நீதிமன்ற உத்தரவின் படி Farkhadயின் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில் இந்த விவகாரத்தில் தந்தையும், மகனும் தனக்கு எதிராக ஏதேனும் சூழ்ச்சி செய்கிறார்களோ எனச் சந்தேகப்பட Farkhadயின் மனைவி மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். அப்போது வழக்கைத் தீவிரமாக விசாரித்த நீதிமன்றம், தந்தையும், மகனும் சேர்ந்து செய்த சதி வேலையைக் கண்டுபிடித்தது.

அதன்படி விவாகரத்து வழக்கில் தனது தந்தையும், கோடீஸ்வரருமான Farkhad Akhmedov உடன் இணைந்து சொத்து மதிப்பை மறைத்துள்ளார் மகனான Temur Akhmedov. இதன் மூலம் தனது தாய்க்குக் கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தின் தொகை என்பது குறைந்துள்ளது. இதையடுத்து Temur செய்தது தவறு என்பது தெரியவந்தது.

இதையடுத்து Temurவின் அம்மாவுக்கு 750 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிரிட்டன் நாட்டின் நீண்ட நெடிய விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. சொத்துக்கு ஆசைப்பட்டுப் பெற்ற தாய்க்குச் சேர வேண்டிய பங்கினை கொடுக்காமல் மகனே சொத்தினை குறைத்துக் காண்பித்த சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்