Russia – Ukraine Crisis: வீட்டு மேல விழுந்த ரஷ்ய ராக்கெட்.. பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் உக்ரைனின் பிரபல நடிகை ஒருவர் மரணம் அடைந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

"இதுதான் நீங்க வேலை பாக்குற லாஸ்ட் நாள்"...800 ஊழியர்களை ஒரே வீடியோ காலில் வேலையை விட்டு தூக்கிய கம்பெனி..!

போர்

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மோசமான தாக்குதலை சந்தித்து வருகிறது உக்ரைன் தேசம். நேட்டோ அமைப்புடன் இணைய உக்ரைன் தேசம் விருப்பம் தெரிவித்து இருந்தது. இதனை கடுமையாக எதிர்த்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இதனை அடுத்து பெலாரஸ் நாட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்த ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்தனர்.

உக்ரைனின் கார்கிவ், மரியு போல் மற்றும் தலைநகர் கீவ் -ல் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் உக்கிரமான போர் நடந்து வருகிறது.

நடிகை பலி

இந்நிலையில், ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பிரபல நடிகையான ஒக்ஸானா ஷ்வெட்ஸ் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. உக்ரைனின் கீவ் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒக்ஸானாவின் மறைவை உறுதிசெய்து, அவரது திரை குழுவான யங் தியேட்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், "கீவில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் ஷெல் தாக்குதலின் போது, உக்ரைனின் பிரபல கலைஞர் ஒக்ஸானா ஷ்வெட்ஸ் கொல்லப்பட்டார்" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விருது

67 வயதான நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உக்ரைன் நாட்டில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, 'Honored Artist of Ukraine' ஐ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் பிரபல நடிகை ராக்கெட் தாக்குதலால் கொல்லப்பட்டது திரை துறை கலைஞர்கள் மற்றும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலால் இதுவரையில் 600 க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதாகவும் 1000 ற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. போர் காரணமாக சுமார் 20 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"முடிஞ்சா நெருங்கிப் பாருங்க".. 9 மாநில போலீசுக்கு சவால் விட்ட திருடன்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!

RUSSIA, UKRAINE, UKRAINIAN, UKRAINIAN ACTOR, UKRAINIAN ACTOR OKSANA SHVETS, ROCKET ATTACK, RUSSIA UKRAINE CRISIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்