'காபூலை நோக்கி வந்த விமானம்'... 'நடுவானில் Gun பாயிண்டில் தூக்கிய மர்ம நபர்கள்'... 'இந்த நாட்டு விமானமா'?... அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானுக்கு வந்த விமானம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கிருக்கும் தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைத்து வரும் பணியில் வெளிநாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படைகள் யாரும் எங்கள் நாட்டில் இருக்க கூடாது என தாலிபான்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதற்கிடையே காபூலுக்கு வந்த உக்ரேனிய விமானம் மர்ம நபர்காளல் கடத்தப்பட்டது என்று உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் Yevgeny Yenin கூறியுள்ளார். அந்த விமானம் அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுனுக்கு பறந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உக்ரைன் விமானத்தை கடத்திய கடத்தல்காரர்கள் ஆயுதம் ஏந்தி இருந்த தகவலை அமைச்சர் உறுதி படுத்தியுள்ளார்.

அந்த விமானத்தில் பயணிகள் யாரேனும் இருந்தார்களா, கடத்தல்காரர்கள் யாராவது உக்ரேனிய அரசை தொடர்பு கொண்டார்களா என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்