உக்ரைன் அதிபர் பேசி முடிச்சதும்.. ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று கைத்தட்டிய அமெரிக்க எம்.பிக்கள்.. அப்படி என்ன பேசினார் ஜெலன்ஸ்கி..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் அதிபர் விளாமிடிர் ஜெலன்ஸ்கி ஆற்றிய உரைக்கு அமெரிக்க எம்.பிக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்திய சம்பவம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

உக்ரைன் மீது 2 வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைன் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே ரஷ்யாவுடன் போரிட தங்களுக்கு உதவ வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி மூலம் நேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ‘கடந்த 1941-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி அதிகாலையை இப்போது நினைவு கூற விரும்புகிறேன். அப்போது அமெரிக்க வானம் முழுவதையும் ஆக்கிரமித்து வந்த விமானங்கள் பியர்ல் துறைமுகத்தின் மீது பயங்கர தாக்குதலை நடத்தின. அதுதான் அமெரிக்காவை இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற செய்தது. அன்று நீங்கள் சந்தித்த பேரிடரை தான் உக்ரைன் மக்களாகிய நாங்கள் இன்று சந்தித்து வருகிறோம்.

ஐரோப்பா கடந்த 80 ஆண்டுகளில் கண்டிராத பயங்கரவாதத்தை கண்டு கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் எங்களுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்’ என உருக்கமாக பேசினார். இதை கேட்ட அமெரிக்க எம்.பிக்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உணர்ச்சிவசப்பட்டனர்.

UKRAINE, ZELENSKY, US

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்