'WORLD WAR Z' உக்ரைனை தாக்கும் ரஷ்யா பீரங்கிகளில்.. மிகப் பெரிய ரகசிய குறியீடு.. அதிர வைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, பீரங்கிகளில் இருக்கும் ரகசிய குறியீடுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் பீரங்கிகள், வாகனங்கள், போர் கருவிகள் அனைத்திலும் Z என்ற குறியீடு உள்ளது. இந்த குறியீட்டின் பின்னணியில் நான்கு காரணங்களை முன் வைக்கிறார்கள் போரை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுநகர்கள். அத்துடன் பலரும் குறியீடு குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
கோபம் அடைந்த ரஷ்யா அதிபர் புதின்:
நேட்டோ உறுப்பு நாடாக சேர ஆசைப்பட்டதால் உக்ரைன் மீது கோபம் அடைந்த ரஷ்யா, கடுமையாக எச்சரித்து இருந்தது. ஆனால் ரஷ்யாவை எதிர்த்து சுதந்திரமாக செயல்பட உக்ரைன் விரும்பியது. இதை அந்நாட்டு அதிபரும் தனது பேச்சில் வெளிப்படுத்தினார். இதனால் கோபம் அடைந்த ரஷ்யா அதிபர் புதின் உக்ரைன் மீது போரை அறிவித்தார். உக்ரைன் தங்கள் வழிக்கு வர வேண்டும் அல்லது உக்ரைன் ராணுவம், அந்நாட்டு அதிபரின் ஆட்சியை அகற்றி விட்டு ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கெடு விதித்து ரஷ்ய அதிபர் போரை தொடங்கினார்.
தீவிரமான போர்:
ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. பீரங்கிகளுடன் ரஷ்ய ராணுவ படை வீரர்களும் தலைநகர் கீவ் நகரை குறித்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். தற்போது போர் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட வாய்ப்பு உள்ளது.
Z என்ற குறியீடுகள்:
இந்த நிலையில் உக்ரைனுக்குள் புகுந்து இருக்கும் ரஷ்யாவின் பீரங்கிகள், வாகனங்கள், போர் கருவிகள் அனைத்திலும் Z என்ற குறியீடுகள் இருக்கிறது. மேலும் சில வாகனங்களில் வட்டம் போட்டு அதில் Z என்ற குறியீட்டை வைத்து இருக்கிறார்கள். இன்னும் சில வாகனங்களில் முக்கோணம் என்ற சிம்பிளை வைத்து உள்ளே Z என்ற குறியீடு இருக்கிறது.. ரஷ்ய ராணுவ வாகனங்களில் இந்த குறியீடு ஏன் இப்படி போடப்பட்டு இருக்கிறது என்று விவாதம் எழுந்துள்ளது.
ஏன் இந்த குறியீடு?
இந்த நிலையில் இதற்கு 4 காரணங்கள் இருக்கலாம் என வல்லுநர்கள் சொல்கிறார்கள். இந்நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருக்கும் ராப் லீ என்ற நபர் இந்த காரணங்களை விளக்கி உள்ளார். முதலாவது காரணம் - ரஷ்யா தனது வாகனங்களை அடையாளம் கண்டுகொள்ள இந்த குறையீட்டை பயன்படுத்தி உள்ளது. எதிரி நாட்டு வாகனங்களுக்கும், ரஷ்ய வாகனங்களுக்கும் வேறுபாட்டை கண்டுபிடிக்கும் வகையில் இந்த குறியீடு இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக சொல்லப்படும் விஷயத்தை பார்ப்போம். இந்த z குறியீட்டை எதிரி நாட்டு வாகனங்களும் பயன்படுத்தி குழப்ப முடியும் என்பதால், ரஷ்யா இப்படி செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் சொல்கிறார்கள். இது பெரும்பாலும் வாகனங்கள் செல்ல போகும் இடத்தை குறிக்கும். ரஷ்யாவின் பீரங்கி எந்த பகுதிக்கு செல்கிறது என்பதை குறிக்க இப்படி குறியீடுகளை அவர்கள் சங்கேதமாக பின்பற்றலாம் என்று கூட சொல்கிறார்கள்.
பெரும் திட்டம்:
மூன்றாவது காரணம் : ரஷ்யா தற்போது உக்ரைனில் இருக்கும் டோன்ஸ்டாகே, லுஹான்ஸ்டாக் ஆகிய பகுதிகளை சுதந்திரமான பகுதியாக அறிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு அனுப்பும் வாகனங்களை ரஷ்யா இப்படி குறிப்பிடலாம் என்கிறார்கள். ரஷ்யா முறையான திட்டமிடலோடுதான் இந்த போரை நடத்தி வருவதால் அதற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக இருக்கலாம் என்கிறார்கள்.
WORLD WAR Z
காரணம் 4 - ராப் லீ இன்னொரு காரணத்தையும் விளக்கி உள்ளார். அதன்படி சிலர் இதை WORLD WAR Z என்று கூறுகிறார்கள். ரஷ்யா தங்களின் படையெடுப்பிற்கு இப்படி பேர் வைத்து இருக்கலாம். சோவியத்தை மொத்தமாக மீட்க ரஷ்யா செய்யும் கடைசி போர் என்பதை குறிக்கும் வகையில் இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த தகவல் எல்லாம் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுபவை ஆகும். ரஷ்யா இதுபற்றி எந்தவிதமான அறிவிப்போ, அல்லது தகவல்களை வெளியிடவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ரஷ்யர்களாக இருக்க வெட்கப்படுறோம்.. போர் வேண்டாம்.. இன்று உக்ரைன், நாளை நீங்களாக இருக்கலாம்".. ரஷ்ய மக்கள் போர்க்கொடி
- பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ரஷ்யா திடீர் அழைப்பு..!
- "சுத்தி வளச்சிட்டாங்க சார்.. என்ன பண்றது".. உக்ரைன் வீரரின் கேள்விக்கு கேப்டன் சொன்ன பதில்.. உலகை திரும்பிப் பார்க்க வைத்த வீடியோ..!
- உக்ரைன் மீது தொடர் போரிட்ட ரஷ்ய படைகள்.. வீடியோக்களை பகிர்ந்த மக்கள்.. ட்விட்டர் தந்த அதிரடி விளக்கம்
- கிச்சன் வரை பாதிக்கும் ரஷ்யா-உக்ரைன் போர்.. இல்லத்தரசிகளுக்கு புதிய தலைவலியா?.. உயருது "முக்கிய" எண்ணெய் விலை
- என் குழந்தை இங்க இருக்க வேணாம்.. பாதுக்காப்பான இடத்துக்கு கூட்டிட்டு போங்க.. மகளை கட்டியணைத்து அழுத உக்ரைன் தந்தை
- "போர்ல எங்களோட நிக்க யாருமே இல்ல.. தனியா நிக்குறோம்!".. உக்ரைன் அதிபரின் நெஞ்சை பிழியும் பேச்சு
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- தங்கம் வாங்க சரியான நேரம்.. சவரனுக்கு 1200 ரூபாய் சரிவு..!
- உக்ரைன் வாழ் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் .. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு