முன்னேறும் ரஷ்ய ராணுவம்.."உடனே லேப்-ல இருக்கத எல்லாம் அழிச்சிடுங்க" உக்ரைனுக்கு WHO எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் உள்ள ஆய்வகங்களில் ஆபத்தான நோய் கிருமிகள் இருந்தால் உடனடியாக அவற்றை அழிக்குமாறு உலக சுகாதார ஆணையம் எச்சரித்துள்ளது.

Advertising
>
Advertising

பரோட்டா சாப்டா பரிசு, மெடல், கோப்பை... ‘வெண்ணிலா கபடி குழு’ சூரிக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..

போர்

நேட்டோ அமைப்புடன் இணையும் உக்ரைனின் விருப்பத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இதன் காரணமாக பெலாரஸ்-ல் இருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்தனர்.

இதுவரையில் இந்தப் போரினால் 400 உக்ரைன் மக்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அமைச்சகம்  தெரிவித்து இருக்கிறது. மேலும், சுமார் 15 லட்சம் மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

ஆபத்தான நோய்க் கிருமிகள்

உக்ரைனிய ஆய்வகங்களில் ஒருவேளை ஆபத்தான நோய் கிருமிகள் சேமிக்கப்பட்டு வைத்திருந்தால், ரஷ்ய ராணுவ தாக்குதலில் ஆய்வகங்கள் சேதமடைவதன் மூலம் இந்த கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதாக உயிரியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மற்ற பல நாடுகளைப் போலவே, உக்ரைனிலும் பொது சுகாதார ஆய்வகங்கள் உள்ளன. அவை கொரோனா உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்கள் இரண்டையும் பாதிக்கும் ஆபத்தான நோய்களின் அச்சுறுத்தல்களை குறைப்பது எப்படி? என்ற ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக சுகாதார மையத்தின் ஆதரவுடன் இந்த ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன.

இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஆபத்தான நோய்க் கிருமிகள் கசிவதை தடுக்கும் வகையில் அவை அழிக்கப்பட வேண்டும் என உக்ரைனில் உள்ள சுகாதார அமைச்சகம் மற்றும் பிற பொறுப்பு அமைப்புகளுக்கு கோரிக்கை வைக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் ஆய்வகங்களில் ஆபத்தான நோய் கிருமிகள் இருந்தால் அவற்றை உடனடியாக அழிக்குமாறு உலக சுகாதார மையம் உத்தரவிட்டு இருப்பது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு வாக்கு வித்தியாசத்துல யாரும் ஜெயிச்சது இல்ல.. யாருப்பா இந்த சுனில் குமார்?

UKRAINE, DESTROY PATHOGENS, HEALTH LABS, WHO, நோய் கிருமிகள், நேட்டோ அமைப்பு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்