நேற்று நடந்த பேச்சுவார்த்தை.. ஒருவழியா அத செய்ய உக்ரைனும் ரஷ்யாவும் ஓகே சொல்லிடுச்சு.. மக்கள் நிம்மதி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட உக்ரைன் பிரதிநிதி, தங்களது நாடு வைத்த கோரிக்கையை ரஷ்யா ஏற்கவில்லை என்றும் இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்ற புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

தொடரும் போர்

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இந்நிலையில், உக்ரைனின் 6 பக்கங்களில் இருந்தும் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்க, உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அமைதி பேச்சு வார்த்தை

இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைனை முதலில் ரஷ்யா அழைத்தது. ஆரம்பத்தில் பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சு வார்த்தை நடத்திட முடியாது என மறுத்த உக்ரைன் பின்னர் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டது. இதனிடையே நேற்று இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில் உக்ரைன் சார்பில் மைகைலோ போடலியாக் (Mykhailo Podolyak) கலந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர்,' மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கிடைத்திருக்கும் இடங்களில் மக்களை வெளியேற்ற இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன" என்றார்.

உணவு மற்றும் மருத்துவம்

கடுமையான சண்டை நடக்கும் இடங்களுக்கு மருந்துகள் மற்றும் உணவுகளை விநியோகிப்பது குறித்தும் இருநாடுகளும் புரிந்துணர்வுக்கு வந்திருகின்றனர். போர் துவங்கியதில் இருந்து முதல் முறையாக இருநாடுகளும் ஒரு முடிவில் சமரசம் ஆகி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருப்பது உலக அளவில் சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

UKRAINE, RUSSIA, WAR, உக்ரைன், ரஷ்யா, போர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்