உக்ரைனில்.. செய்தி ஒளிபரப்பின் போது வெடித்த குண்டு.. "அப்படியே மின்னல் மாதிரி இருந்திச்சு.." பதறி நடுங்கிய பத்திரிக்கையாளர்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் செய்தி ஒளிபரப்பு நடைபெற்று கொண்டிருந்த போது, திடீரென நடந்த சம்பவத்தால் செய்தி பதிவு செய்யப்படுவது பாதியில் நிறுத்தப்பட வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாட்டின் மீது, கடந்த 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது.

கடந்த எட்டு நாட்களுக்கும் மேலாக, உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொருளாதார தடை

உக்ரைனிலுள்ள மக்கள், தங்களின் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி, பதுங்குகுழி போன்ற இடங்களில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். உக்ரைனில் படித்தும் பணிபுரிந்து வந்த இந்திய மக்கள், பத்திரமாக சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

ராணுவ வீரர்கள்

அதே போல, பல உலக நாடுகளும், போரை நிறுத்தும் படி, ரஷ்யாவுக்கு கோரிக்கை வைத்தும் வருகின்றனர். இந்த ராணுவ தாக்குதலால், இரு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், உயிரிழந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

போரின் தீவிரம்

போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், உக்ரைனின் கீவ், கெர்சன், கார்கிவ் ஆகிய நகரங்களில் ரஷ்யா உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் மூலம், கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமான ஒடெசா நகரை நோக்கி, ரஷ்ய படைகள் தாக்குத்தலை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விழுந்த வெடிகுண்டு

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில், செய்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தில் இருந்து செய்திகள் குறித்து வீடியோவினை பதிவு செய்து கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், அவருக்கு பின்னால், சற்று தூரத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது, செய்தியாளர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அதிர வைத்த சம்பவம்

எதிர்பாராத நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியதால், பதறிப் போன அந்த செய்தியாளர், உடனடியாக செய்தியை பதிவு செய்வதை நிறுத்தி விடுகிறார். அந்த சமயத்தில், இரண்டு வெடிகுண்டுகள், ஏதோ ஒரு பகுதியில் விழுந்து வெடித்து சிதறும் போது, அதன் மூலம் ஒளிர்ந்த வெளிச்சம், கண்களை கூசும் வகையில் பார்க்கும் நபர்களை அதிர வைத்துள்ளது.

 

திரும்பும் இடம் எல்லாம் இப்படி ஒரு சூழல் உக்ரைனில் இருப்பதால், உலக நாடுகள் மத்தியில் கடும் பதற்றத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.

RUSSIA UKRAINE, WAR, REPORTER, BOMB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்