"பேச்சுவார்த்தைக்கு தயார்.." ரஷ்யா வைத்த கோரிக்கை.. உக்ரைன் போட்ட தடாலடி கண்டிஷன்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 4 நாட்களாக, ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய அதிபர் புதினின் முடிவு, உலக நாடுகள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertising
>
Advertising

உக்ரைனின் முக்கிய நகரங்கள் சிலவற்றை, ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த போரின் மூலம், ராணுவ வீரர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொது மக்களும் உயிரிழந்ததாக தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளது.

பாதுகாப்பு வேண்டி தஞ்சம்

இருந்த போதிலும், உக்ரைன் தலைநகரான கீவ்வை கைப்பற்றும் நோக்கில், ரஷ்ய படை தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. தங்களின் பாதுகாப்புக்கு வேண்டி, உக்ரைனிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், பதுங்கு குழி, சுரங்க பாதை உள்ளிட்ட பல இடங்களில், பாதுகாப்புக்கு வேண்டி தஞ்சம் அடைந்துள்ளனர்.

மறுத்த ரஷ்யா

அது மட்டுமில்லாமல், கீவ் நகர் முழுவதும், உக்ரைன் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து, கடும் ஊரடங்கும் அமலாகியுள்ளது. மக்கள் குடியிருப்புகளை ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதனை ரஷ்யா முற்றிலும் மறுத்திருந்தது.

பேச்சுவார்த்தைக்கு தயார்

ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்து வந்த நிலையில், பெலாரஸில் வைத்து பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயார் எனக்கூறி, உக்ரைன் அதிபருக்கு அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ரஷ்யாவை போல, பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அரசு தயாராக இருந்தாலும், பெலாரஸில் வைத்து பேச்சு வார்த்தையை நடத்த, அந்நாட்டு அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மறுத்த உக்ரைன் அதிபர்

இதற்கு காரணம், தங்கள் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க, பெலாரஸ் அரசும் உதவி செய்ததால், அங்கு வைத்து பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். அதே போல, வார்சா, பிராட்டிஸ்லாவா, இஸ்தான்புல், புடாபெஸ்ட் அல்லது பாகூ ஆகிய இடங்களை பேச்சு வார்த்தைக்கு வேண்டி, உக்ரைன் அதிபர் முன் மொழிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்ன முடிவு?

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும், பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறது. ஆனால், ரஷ்ய அதிபர் தேர்வு செய்த இடத்திற்கு, உக்ரைன் அதிபர் மறுப்பு தெரிவித்துள்ள்ளார். இதனால், பேச்சுவார்த்தைக்கு வேண்டி, இனி வரும் நாட்களில், இரு நாடுகளும் என்னென்ன முடிவுகள் எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

RUSSIA, UKRAINE, PUTIN, TALKS, BELARUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்