யாருமே எங்களுக்கு உதவி பண்ணல.. முதல்ல சப்போர்ட் பண்ணினவங்களும் இப்போ ரஷ்யாவ கண்டு பயப்படுறாங்க.. உக்ரைன் அதிபர் உருக்கம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன்: ரஷ்யா எங்கள் நாட்டின் மீது நடத்திவரும் போரில் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் ஏதும் உதவவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு நோட்டா படைகளும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் சப்போர்ட்டாக உள்ளது. ரஷ்யாவிற்கு பாகிஸ்தான் சீனா இலங்கை ஆப்கானிஸ்தான் என அத்தனை அண்டை நாடுகளும் ஆதரவாக உள்ளது.

உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உரை:

முதலில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியது. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு போட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் நேற்று (வியாழக்கிழமை) இரவு உரையாற்றினார். அப்போது எங்கள் நாட்டிற்கு யாரும் உதவவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவை எதிர்கொள்ள யாராவது இருக்கிறார்களா?

அதுமட்டுமில்லாமல், 'ரஷ்யா பெரிய அளவில் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவின் வல்லரசு படையை எதிர்த்து உக்ரைன் தனித்துப் போரிட்டு வருகின்றது. ரஷ்ய படைகளை எதிர்கொள்வதில் உக்ரைன் தனித்து விடப்பட்டு விட்டது. உக்ரைனுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்கொள்ள யாராவது இருக்கிறார்களா என்றால், இல்லை என்பதுதான் பதில்' என உருக்கமாக கூறினார்.

எல்லாரும் பயப்படுறாங்க:

மேலும், 'நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக்க யார் தயாராக இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர், உக்ரைனுக்கு துணையாக இருப்போம் எனக் கூறியவர்கள் அனைவரும் இப்போது அஞ்சுகிறார்கள். இதுவரை ரஷ்யாவின் தாக்குதலில் ராணுவத்தினர், பொதுமக்கள் உட்பட 137-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். ரஷ்ய படைகள் என்னையும் என் குடும்பத்தினரையும் முதல் எதிரியாக பார்க்கிறது. தலைநகர் கீவில்தான் தற்போதும் இருக்கிறது' எனக்கூறியுள்ளார்.

தற்போது உக்ரைனில் போர் நடைபெற்று வரும் சூழலில், உக்ரைனில் இருந்து 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் போர் எதிரொலியாக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

UKRAINE, ZELENSKY, WAR, ஜெலன்ஸ்கி, உக்ரைன், போர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்