உக்ரைனில் விழுந்த 500 கிலோ ரஷ்ய வெடிகுண்டு.. "எங்களுக்கு ஏதாச்சும் உதவி பண்ணுங்க".. மனம் உருகி வேண்டும் அமைச்சர்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவின் 500 கிலோ வெடிகுண்டு குறித்து உக்ரைன் அமைச்சர் வெளியிட்டுள்ள புகைப்படம், பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertising
>
Advertising

விடுதி அறையில் காதலனுடன் இருந்த இளம்பெண்.. நள்ளிரவில் ஹோட்டலுக்கு வந்த போன் கால்.. பதறியடித்த ஊழியர்கள்

உக்ரைனில் ரஷ்ய படைகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

நடுவே, தற்காலிகமாக போரை நிறுத்திய ரஷ்யா, தற்போது மீண்டும் தங்களின் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் ரஷ்ய படைகள், குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாட்டினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

உக்ரைன் மக்கள்

அது மட்டுமில்லாமல், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்களும், ரஷ்ய தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இப்படி உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், தங்களின் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

உலக நாடுகள் நிலைப்பாடு

இன்னொரு பக்கம், பல உலக நாடுகள் இந்த போர் குறித்து தங்களின் நிலைப்பாட்டினையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரேனிய வான்வெளியை விமானங்கள் பறக்க தடை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா நேட்டோவுக்கு அறிவுறுத்தினார்.

500 கிலோ வெடிகுண்டு

ரஷ்ய வெடிகுண்டு ஒன்றின் புகைப்படத்தினையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் டிமிட்ரோ குலேபா வெளியிட்டுள்ளார். அந்த வெடிகுண்டினை 500 கிலோ எடையுள்ளது என குறிப்பிட்டுள்ள டிமிட்ரோ, 'இந்த 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு, செர்னிஹிவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் விழுந்துள்ளது. ஆனால் இது வெடிக்கவில்லை. இது மாதிரியான பல வெடிகுண்டு தாக்குதல்களில் பல அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யாவிடம் இருந்து எங்கள் மக்களை பாதுகாக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள். வான்வெளிகளை மூடி, எங்களுக்கு போர் விமானங்களை தாருங்கள். எதையாவது செய்யுங்கள்' என அமைச்சர் டிமிட்ரோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடேங்கப்பா.. 300 வருசம் பழமையான 'மம்மி'.. "பாக்க கடல் கன்னி மாதிரியே இருக்கு.." ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி தகவல்

UKRAINE MINISTER, 500 KG RUSSIAN BOMB IN CHERNIHIV, ரஷ்ய வெடிகுண்டு, உக்ரைன் அமைச்சர்

மற்ற செய்திகள்