எப்போ அப்படியொரு அறிவிப்பு வந்தச்சோ.. அன்னையில இருந்துதான் இது அதிகமாகியிருக்கு.. உக்ரைன் எழுத்தாளர் பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எழுத்தாளர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படை கடும் முனைப்பு காட்டி வருகிறது.
இதனிடையே உக்ரைனின் மற்ற முக்கிய நகரங்களுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பொதுமக்களும் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைனைச் சேர்ந்த எழுத்தாளர் கோன்சலோ லிரா (Gonzalo Lira), உக்ரைன் அதிபர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுக்குறித்து பிப்ரவரி 28-ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ரஷ்யாவுக்கு எதிராக போரிட தயாராக இருக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் ஆயுதம் அளிப்பதாக அதிபர் ஜெலென்ஸ்கியின் ஆட்சி அறிவித்தது. இதனால் உக்ரைனில் உள்ள குற்றவாளிகள் இராணுவ தர ஆயுதங்களைப் பெற்றுள்ளனர். இதன்காரணமாக கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடுமைகள் நடந்து வருகின்றன.
நேற்று இரவு கீவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் ரஷியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறியப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து ரஷ்ய வீரர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தனர். இவை அநேகமாக இரு கும்பல் தொடர்பான துப்பாக்கி சண்டையாக இருக்கலாம். அவர்கள் தங்களது சொந்தப்பகையை தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர்.
இதன் பிறகு பொதுமக்களைக் குறிவைக்கத் தொடங்குவார்கள். இவர்கள் ரஷ்ய அரசுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள் என்ற பெயரில் உக்ரைனில் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இதனால் உக்ரேனிய மக்களே பாதிக்கப்படுவார்கள்’ என கோன்சலோ லிரா கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்