"நீங்க அதுக்கு பயப்படுறீங்க.." இங்கிலாந்து பிரதமரிடம் சரமாரி கேள்விகள்.. கண்ணீர் மல்க முன் வைத்த பெண் பத்திரிகையாளர்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, ரஷ்யா தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது.

Advertising
>
Advertising

"என்னால முடியல மா, பயமா இருக்கு.." இறப்பதற்கு முன் ரஷ்ய வீரர் அனுப்பிய மெசேஜ்.. உருக வைக்கும் தாயின் நிலை

நாளுக்கு நாள், போரின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே இருக்க, உக்ரைனிலுள்ள பொது மக்கள், கடும் அவதிக்குள் ஆகி வருகின்றனர்.

தங்களின் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி, பதுங்கு குழிகளில், உணவு மற்றும் தண்ணீர் என எதுவும் அதிகம் இல்லாமல், கடும் நெருக்கடிக்கு மத்தியில் அடைக்கலம் தேடி வருகின்றனர்.

கவலையில் உலகம்

கடந்த இரு தினங்களுக்கு முன், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆகியோர் பெலாரஸில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், பேச்சு வார்த்தை முடிவுகள் என்ன என்பது பற்றி சரிவர தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் தெரிகிறது. இதனிடையே, போரின் முடிவு தான் என்ன என்ற நிலையில், ஒட்டு மொத்த உலகமே உக்ரைனை கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.

கண்ணீருடன் பெண் பத்திரிகையாளர்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவ மாணவிகள் மற்றும் மக்களை, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு, சொந்த நாட்டிற்கு வர வழி செய்துள்ளார்கள். இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக,  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை செய்தியாளர் சந்திப்பின் போது, உக்ரைன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கண்ணீர் மல்க கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நீங்கள் பயப்படுகிறீர்கள்

டாரியா கலனியுக் என்ற உக்ரைன் பெண் பத்திரிகையாளர், போரிஸ் ஜான்சனிடம் சரமாரியாக சில கேள்விகளை முன் வைத்தார். "இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள், இன்னும் ஏன் உக்ரைனுக் கு ஆதரவை அளிக்கவில்லை?. ஏனென்றால், நீங்கள் அதற்கு பயப்படுகிறீர்கள். 3 ஆவது உலக போர் வந்து விடுமோ என நேட்டோ அஞ்சுகிறது.

மூன்றாம் உலக போர்

ஆனால், மூன்றாம் உலக போர் எங்களுக்கு ஏற்கனவே தொடங்கி விட்டது. உக்ரைனிலுள்ள குழந்தைகள் கூட, குண்டு வெடிப்புக்கு மத்தியில், பயந்து கொண்டே வாழ்ந்து வருகின்றனர். என்னுடைய குடும்பத்தினரும், சக பணியாளர்களும் அழுது கொண்டே இருக்கிறார்கள். இது தான் உக்ரைன் மக்களின் தற்போதைய நிலைமை" என கண்ணீர் பெருக்கெடுக்க கேள்வி கேட்டார்.

போரிஸ் ஜான்சன் சொன்ன பதில்

பெண் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன், "நீங்கள் விரும்பும் வகையில் உதவி செய்ய எங்களால் முடியவில்லை என்பதை நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன். ரஷ்யாவுடன் நேரடி போரில் ஈடுபட்டால், அதனுடைய பின் விளைவுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் பிரதமரிடம், கண்ணீருடன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்கும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

"சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க.." அஸ்வின் இப்படி கொந்தளிக்குற அளவுக்கு முன்னாள் வீரர்கள் என்ன செஞ்சாங்க?

UKRAINE JOURNALIST, BORIS JOHNSON, UKRAINE JOURNALIST QUESTIONS BORIS JOHNSON, பெண் பத்திரிகையாளர், இங்கிலாந்து பிரதமர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்