பிளாஸ்டிக் பெட்டிக்குள் குவியலாக இருந்த 'தங்க' பற்கள்.. உலகையே அதிர வெச்ச பயங்கரம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக தொடர்ந்து போர் நீடித்து வருவது அனைவருக்கும் அறிந்த தகவல் தான்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் ஏரளமான இடங்களை கைப்பற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அது மட்டுமில்லாமல், நாளுக்கு நாள் இந்த போர் தீவிரம் அடைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக, ரஷ்ய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் நகரம் மற்றும் கிராமங்களையும் உக்ரைன் மீட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றது. அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட இஸியம் என்னும் பகுதியில், சுமார் 400 க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய புதைவிடம் ஒன்றை உக்ரைன் அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தது கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போதும் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைன் மீட்ட பகுதியில் அவர்களுக்கு காத்திருந்த சம்பவம், திடுக்கிட வைத்துள்ளது.
உக்ரைனில் உள்ள Pisky Radkivski என்ற கிராமத்தில், உக்ரைன் அதிகாரிகள் தற்போது சோதனை ஒன்றை முன்னெடுத்தனர். அங்கே ரஷ்ய வீரர்களால் சித்ரவதை முகாமாக மாற்றப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றையும் கண்டுபிடித்தனர். அங்கே ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. அப்போது பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதில் குவியல் குவியலாக தங்கத்திலான பற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், பற்களை பறிக்கும் கருவியும் இதனுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த முகாமில் எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதே போல, ரஷ்ய வீரர்கள் கைப்பற்றிய பகுதியில் இருந்து ஏராளமான பொருட்களையும் அவர்கள் ஆக்கிரமித்து சென்றதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றது.
மேலும், இந்த முகாமில் இருந்து அலறல் சத்தத்தை அடிக்கடி கேட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் அதிகரிகளிடம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பெட்டி முழுக்க தங்க பற்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், உலக அளவில் கடும் பீதியை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | "எது, ஒரு செம்மறி ஆட்டின் விலை இம்புட்டு கோடியா?".. பிரமிக்க வைத்த பின்னணி!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரஷ்யாவிடம் இருந்து மீட்ட பகுதியில்.. "குவியல் குவியலா".. உக்ரைனில் காத்திருந்த அதிர்ச்சி!!.. உலகையே அதிர வைத்த பயங்கரம்!!
- "ஐபோன் மட்டும் இல்லனா என்ன ஆகி இருக்கும்??.." ராணுவ வீரர் வாழ்க்கையில் நடந்த திருப்பு முனை.. "எப்படி'ங்க நடந்துச்சு??"
- "ஒரு எஞ்சின் Work ஆகல.. பக்கத்துல இருக்க ஏர்போர்ட்ல தரையிறக்கணும்".. கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் கொடுத்த விமானி.. கொஞ்ச நேரத்துல கேட்ட பயங்கர சத்தம்..!
- ‘இதுதான்யா உண்மையான காதல்’.. காதலிக்கு நடந்த மோசமான விபத்து.. நெட்டிசன்களை உருக வைத்த வீடியோ..!
- உக்ரைனுக்கு வந்த ஐ.நா. தலைவர்.. திடீரென ரஷ்யா செய்த அதிர்ச்சி காரியம்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்..!
- "செர்னோபில் அணு உலை எப்போ வேணும்னாலும் வெடிக்கலாம்".. குண்டை தூக்கிப்போட்ட உக்ரைன்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!
- "சரணடையணுமா.. அப்படி ஓரமா போயி..".. ரஷ்ய ராணுவத்தை சிங்கிளாக எதிர்த்த உக்ரைன் வீரர்.. அரசு கொடுத்த கவுரவம்.!
- Russia – Ukraine Crisis: 'தனி மனிதனின் அதிகார பணவெறி'.. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பரபரப்பு பதிவு..!
- பிரம்மாண்ட கட்டிடத்தின் நடுவே ராக்கெட்டை ஏவிய ரஷ்ய ராணுவம்.. பில்டிங் எப்படி ஆகிருச்சுன்னு பாருங்க..!
- "அவர்கிட்ட சொல்லிவைங்க. தொலைச்சு கட்டிடுவேன்" கொந்தளித்த புதின் ..என்ன ஆச்சு..?