"இந்த உலகமே 'அந்த' தப்ப பண்றதுனால... கடவுள் கொடுத்த தண்டனை தான் 'கொரோனா'ன்னு..." சொன்ன 'பாதிரியாருக்கு' நேர்ந்த 'கதி'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் (Ukraine) நாட்டில் அமைந்துள்ள ஆர்தடாக்ஸ் என்னும் முன்னணி தேவாலயத்தின் தலைவர் பேட்ரியர்ச் ஃபிலரெட் (Patriarch Filaret).

91 வயதான ஃபிலரெட் கடந்த மார்ச் மாதம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 'மனிதர்களின் பாவங்களுக்கு கடவுளின் தண்டனை தான் கொரோனா வைரஸ். அதில் முதல் பாவம் தன்பாலின திருமணங்கள் (same-sex marriage)' என தெரிவித்திருந்தார்.

ஃபிலரெட்டின் இந்த கருத்திற்கு உலகளவிலுள்ள தன்பாலின உரிமை செயல்பட்டார்களிடம் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. மேலும், பல நிறுவனங்களும் அவரது கருத்திற்கு கண்டனங்களை தெரிவித்தது. இந்நிலையில், பேட்ரியர்ச் ஃபிலரெட்டிற்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மேலும் அவர் பூரண குணமடைய வேண்டி, அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென தேவாலயம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று கடவுளின் தண்டனை என கூறிய பாதிரியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்