செர்னோபில் அணுமின் நிலையத்தையும் பிடிச்சிட்டாங்க.. ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ரஷ்யாவின் கண்ட்ரோலில்.. பெரிய ஆபத்தை நோக்கி போய்கிட்டு இருக்கு
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன்: உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்தார்.
வீடியோ காட்சிகள்:
உக்ரைன் தலைநகர் கியேவில் (Kyiv) இருந்து வடக்கே 60 மைல் தொலைவில் அமைந்துள்ள அழிக்கப்பட்ட அணு உலையான செர்னோபில்லின் முன் ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் நிற்பதை வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று பிற்பகல் ரஷ்யப் படைகள் "செர்னோபில் அணுமின் நிலையத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக" கூறியிருந்தார்.
ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம்:
1986-ஆம் ஆண்டில் நடந்த சோகம் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக எங்கள் பாதுகாவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து காக்க முயன்றுவருவதாக கூறினார். செர்னோபில் தாக்கப்படுவது முழு ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம் என்று அவர் கூறினார்.
ஆனால், அவர் கூறிய சில மணி நேரங்களில் செர்னோபில் முற்றிலுமாக ரஷ்ய படைகளின் கைகளுக்கு சென்றது. 1986-ல் செர்னோபில் அணு உலையில் மனித தவறுகளால் நடந்த விபத்து வரலாற்றில் மிக மோசமான அணுசக்தி பேரழிவை ஏற்படுத்தியது.
அணு உலை-4 (reactor 4) விபத்துக்குள்ளான பிறகு, இன்னும் மூன்று இயக்க அலகுகள் இயக்கப்படாத நிலையில், அணுமின் நிலையம் இறுதியாக 2000-ல் மூடப்பட்டது. இப்போது, செர்னோபில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளதால், இது மொத்த ஐரோப்பாவுக்கும் ஆபத்தாக மாறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உக்ரைன் - ரஷ்யா போர் : "மோடி மனசு வெச்சா அது நடக்கும்.. உடனே புதினுக்கு போன் பண்ணுங்க.." வேண்டுகோள் வைக்கும் தூதர்
- உக்ரைன் மேல ரஷ்யா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தல.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
- அப்படியே யூடர்ன் அடிச்சு திரும்பி போயிடுங்க.. இந்த பக்கம்லாம் வரக் கூடாது.. ரிட்டர்ன் ஆன ஏர் இந்தியா விமானம்
- குண்டு மழை பொழியும் ரஷ்யா.. பாதுகாப்புக்காக கூட்டம் கூட்டமாக உக்ரைன் மக்கள் செல்லும் இடம்..!
- ரஷ்யா - உக்ரைன் போர்.. "அவர்கிட்ட சீக்கிரம் பேசுங்க".. பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைக்கும் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது டெல்லியில்?
- தீவிரம் ஆகும் உக்ரைன் ரஷ்யா போர்.. தமிழர்கள் உதவி கிடைக்க வழி அமைத்த தமிழக அரசு
- யாரவது எங்கள காப்பாத்துங்க.. ரஷ்யாவுடன் போர் தொடங்கியுள்ள நிலையில் வேண்டுகோள் விடுத்த உக்ரைன்
- எங்களுக்கும் உக்ரைனுக்கும் நடக்குற போர்ல யாராவது குறுக்க வந்தா.. வரலாறு காணாத அழிவ சந்திப்பாங்க.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடும் எச்சரிக்கை
- தொடங்கியது ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவில் எந்த பொருட்களின் விலை உயர போகுது? நிபுணர்கள் எச்சரிக்கை
- உக்ரைன் கூட போர் பதற்றம் இருக்கும்போது ரஷ்யா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பரபரப்பில் உலக நாடுகள்..!