1400 கிலோமீட்டர் நடந்தே உக்ரைனை விட்டு வெளியேறிய சிறுவன்.. இறுதியாக மகனை கண்டுபிடித்த தாய்.. கண்கலங்க வைக்கும் வீடியோ.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, 1400 கிலோமீட்டர் நடந்தே சென்று அருகில் உள்ள நாட்டில் தஞ்சமடைந்த 11 வயது சிறுவன் மீண்டும் தனது தாயுடன் இணைந்திருக்கிறான். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

போர்

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, உக்ரைன் நீட்டின் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். ரஷ்ய படையினரின் தாக்குதல் காரணமாக சுமார் 600 உக்ரைன் மக்கள் உயிரிழந்து இருப்பதாகவும் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும், அண்டை நாடுகளில் சுமார் 20 லட்சம் உக்ரைன் மக்கள் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

பல மக்கள் தங்களது குடும்பங்களை இந்தப் போரினால் இழந்துள்ளனர். தாய், தந்தையர் தங்களது குழந்தைகளை அகதி முகாம்களில் தேடி அலையும் துயரம் அங்கே நடைபெற்று வருகிறது.

1400 கிலோமீட்டர் பயணம்

தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரோஷியே என்ற நகரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஹசன் பிசெக்கா. சிரியாவை சேர்ந்த இந்த சிறுவனது தந்தை அந்த நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்ததை அடுத்து தாய் ஜுலியாவுடனும் பாட்டியுடனும் உக்ரைனில் குடியேறினான் ஹசன்.

உக்ரைனில் நடைபெற்று வரும் ரஷ்ய தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஹஸனின் குடும்பமும் ஒன்றாகும். ஜபோரோஷியே நகரில் வசித்துவந்தது இந்தக் குடும்பம். இதனிடையே ரஷ்ய ராணுவம் தாக்குதலை ஆரம்பித்த போது ஜூலியாவின் தாய்க்கு உடல்நிலை  சரியில்லாமல் போயிருக்கிறது.

தனி பயணம்

இதனால் உடனடியாக நகரத்தை விட்டு ஜூலியாவால் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனியாக நடந்து சென்று எப்படியாவது ஸ்லோவாக்கியாவை அடையும் படி ஹசனை வலியுறுத்திய அவனது தாய் ஜூலியா, அவனது விபரங்கள், பாஸ்போர்ட் மற்றும் அவனை அழைத்துச் செல்ல வரும் உறவினர்களின் முகவரி ஆகியவற்றை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் சிறுவனும் தனது தாய் கொடுத்த கடிதத்தை கையில் பிடித்தபடியே 1400 கிலோ மீட்டர் பயணித்திருக்கிறான். இறுதியாக ஸ்லோவாக்கியா நாட்டிற்கு பத்திரமாக சென்றடைந்தான் ஹசன்.

தாயின் போராட்டம்

இந்நிலையில், தாயின் உடல்நிலை சரியானதும் அவருடன் நகரத்தை விட்டு வெளியேறி ஸ்லோவாக்கியாவிற்கு சென்றிருக்கிறார் ஜூலியா. அங்கே தனது மகனை தேடும் பணியில் இறங்கிய ஜூலியா, இறுதியாக ஹசனை கண்டுபிடித்திருக்கிறார். ஹசன் கையில் எழுதி இருந்த அவனது அம்மாவின் போன் நம்பர் மூலமாக அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறி 1400 கிலோமீட்டர் தூரம் பயணித்த ஹசன் இறுதியாக அவனது அம்மாவுடன் சேர்ந்த வீடியோ இப்போது வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

UKRAINE, RUSSIA, WAR, HASANPISECKA, உக்ரைன், ரஷ்யா, போர், ஹஸன்பிசெக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்