யாரவது எங்கள காப்பாத்துங்க.. ரஷ்யாவுடன் போர் தொடங்கியுள்ள நிலையில் வேண்டுகோள் விடுத்த உக்ரைன்
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன்: உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர், எங்கள் நாட்டை ரஷ்ய தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடங்கியது ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவில் எந்த பொருட்களின் விலை உயர போகுது? நிபுணர்கள் எச்சரிக்கை
உக்ரைனில் எமெர்ஜென்சி:
ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரைன் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக உக்ரைனில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு நேடா படைகளும், அமெரிக்காவும் சப்போர்ட்டாக உள்ளது. ரஷ்யாவிற்கு பாகிஸ்தான் சீனா இலங்கை ஆப்கானிஸ்தான் என அத்தனை அண்டை நாடுகளும் ஆதரவாக உள்ளது.
ரஷ்ய படைகள் தாக்குதல்:
தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும், உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு போட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
ஜோ பைடன் ரஷ்யா மீது கடும் கண்டனம்:
உச்சக்கட்ட பதற்ற நிலையில் உக்ரைன் நாடு உள்ளது. அதோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்:
ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 'தங்கள் நாட்டை ரஷ்ய தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும். ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். தூதரக ரீதியில் கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனை பாதுகாக்க உதவ வேண்டும்:
மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கையில், 'ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஒரு நாடு இப்படி விதிகளை மீறி செயல்பட்டால், மற்ற நாடுகளும் இதனை பின்பற்ற நேரிடும். ஐநாவில் உறுப்பு நாடாக உள்ள அனைவரும் உக்ரைனை பாதுகாக்க உதவ வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. ரஷ்யாவுக்கு அமெரிக்கா கொடுத்த வாய்ப்பு.. உக்ரைன் விவகாரத்தில் திருப்பம்
- ரஷ்யா - உக்ரைன் போர் பதட்டம்: வானில் 'ரிலாக்ஸ்' என்ற வடிவில் சென்ற விமானம்.. வெளிவந்த உண்மை!
- 10 வெப்சைட்களை ஹேக் பண்ணிட்டாங்க! கண்டிப்பா இது அவங்களோட வேலை தான்.. உக்ரைன் அரசுத் தகவல்
- உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம்.. திடீரென வெளியான செயற்கைக்கோள் படங்கள்.. உலக நாடுகள் அதிர்ச்சி..!
- இதென்னடா தங்கத்துக்கு வந்த அதீத மவுசு.. தென்னை மரத்துல தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுற கதையால்ல இருக்கு!
- ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சுட்டுக் கொலை.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.. யார் இந்த அபு இப்ராஹிம் அல் குரைஷி?
- பேரழிவை சந்திக்க ரெடியா? முடிஞ்சா 'அந்த நாட்டுக்கு' போங்க பார்க்கலாம்.. ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்
- என்ன கல்யாணம் பண்ண போற பொண்ணு எங்கே? ஜோடியை தேடி நாடு விட்டு நாடு சென்ற உலகின் உயர்ந்த மனிதர்!
- பிரியங்கா சோப்ரா-வின் கணவர் அமெரிக்க அதிபர் உடன் செய்யும் லூட்டியைப் பாருங்க..!
- ஹெச்1பி விசாவுக்குக் கடும் கட்டுப்பாடுகள்… பைடன் அரசு கொண்டு வரும் புதிய மசோதாக்கள்..!