"நாங்க சிரிச்சிட்டே தான் இருக்கோம்.." போரில் மாய்ந்து போன பிரபல நடிகர்.. கடைசி பதிவால் உடைந்து போன ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைனில் கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்ய நாட்டின் ராணுவம், தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனும் எதிர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளிலுமுள்ள ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், இதில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொது மக்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாக, உக்ரைன் தெரிவித்துள்ளது.
நடிகர் பஷா லீ
அதே போல, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக போராட வேண்டி, உக்ரைன் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களும், ராணுவத்தில் இணைந்து தங்களின் நாட்டுக்காக ஆயுதங்கள் ஏந்தி சண்டை போட்டு வருகின்றனர். அந்த வகையில், உக்ரைன் நடிகர் பஷா லீ என்ற நடிகரும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருந்தார்.
உயிரிழந்த நடிகர்
இதனிடையே, வடக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய படைகளுக்கும், உக்ரைன் வீரர்களுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலின் போது, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகர் பஷா லீ (வயது 33) என்பவர், ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனை உக்ரைனின் ஒடேசா சர்வதேச திரைப்பட துறையினர் உறுதி செய்துள்ளனர்.
வெளியான அறிக்கை
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தனது நாட்டினை பாதுகாக்க வேண்டி, உக்ரைனின் ஆயுத படையில் நடிகர் பஷா லீ இணைந்தார். இர்பின் பகுதியில் நடந்த சண்டையின் போது, எதிரிகளின் குண்டு வீச்சு தாக்குதலில் சிக்கிய பஷா லீ உயிரிழந்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் உருக்கம்
நடிகர் பஷா லீயின் மறைவு, உக்ரைனிலுள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக பஷா லீ புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவும், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, அவர்களை இன்னும் அதிகம் மனம் வருந்தச் செய்துள்ளது.
கடைசி இன்ஸ்டா பதிவு
அந்த பதிவில், "கடந்த 48 மணி நேரமாக நாங்கள் எப்படி வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளாகிறோம் என்பதை உட்கார்ந்து படம் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் ரஷ்ய படைகளை சமாளிப்போம். உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவோம்" என பஷா லீ குறிப்பிட்டிருந்தார்.
கிரிமியாவில் பிறந்த நடிகர் பஷா லீ, கடந்த மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி, நாட்டின் பிராந்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "9 வருஷத்துக்கு முன்னாடியே ரஷ்யா அதை பண்ணிடுச்சு".. குண்டைத் தூக்கிப் போட்ட டெலிகிராம் ஓனர்..!
- "எதிர்காலத்துல என்ன வேணா நடக்கலாம்.. அது ஒன்னு தான் நமக்கு இருக்குற ஒரே வழி".. இந்திய ராணுவ ஜெனரல் பரபரப்பு தகவல்..!
- செல்லப் பிராணிகளால் உக்ரைனை விட்டு வர மறுக்கும் இந்திய மருத்துவர் –இதுதான் காரணமா?
- "இந்திய ராணுவத்தில் இடம் கிடைக்கல.." உக்ரைனில் பயின்று வந்த தமிழக மாணவர்.. பெற்றோருக்கு தெரிய வந்த தகவலால் அதிர்ச்சி
- இனி அந்த லிஸ்ட்ல நீங்க யாருமே இல்லை.. உலக நாடுகளுக்கு அடுத்த ‘ஷாக்’ கொடுத்த ரஷ்யா..!
- என்னது போர்ல இவ்ளோ ரஷ்ய வீரர்கள் இறந்திருக்காங்களா..? உக்ரைன் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!
- ரஷ்யா உடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உக்ரைன் அதிகாரி மரணம்.. இதுதான் காரணமா..? வெளியான பரபர தகவல்..!
- "நம்ம போர் விமானங்கள்ல சீனா கொடிய கட்டுங்க.. ரஷ்யா மேல குண்டு போடுங்க".. டொனால்டு ட்ரம்ப் சொன்ன விபரீத யோசனை..!
- "அவளை இந்த நிலைமைல விட்டுட்டு".. இந்திய கணவர்.. உக்ரேனிய மனைவி.. போர் நடுவே ஒரு உருக்கமான காதல் கதை..!
- "கடைசி இந்திய மாணவர் இங்கிருந்து வெளியேர்ற வர உக்ரைன்ல தான் இருப்பேன்" நெகிழ வைத்த இந்திய டாக்டர்..!