சிறை கைதியுடன் பார்க்காமலே காதல்.. 32 வயது பிரிட்டிஷ் பெண்ணின் வைரல் முடிவு.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காதலுக்கு கண்கள் இல்லை என்கிற பழமொழி உலகம் முழுவதற்கும் பொருந்தும் விதமாக அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்தபடியே இருக்கின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த தாய் ஒருவர் சிறைக்கைதி ஒருவரை பார்க்காமலேயே திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | "பாக்டீரியாவின் இமயமலை இது..நாங்க நெனச்சத விட 5000 மடங்கு பெருசா இருக்கு".. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட புகைப்படம்..!

இங்கிலாந்தைச் சேர்ந்த சுமார் 32 வயதான Laura O'Sullivan என்கிற பெண், 31 வயதான Terrell Ravon Reese என்பவரை அடுத்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளார். இதில் என்ன இருக்கிறது? எனலாம். ஆனால் உண்மையில் ரீஸ் ஒரு சிறைக் கைதி என்பது தான் இதில் இருக்கும் அல்டிமேட் ட்விஸ்ட்.

ஆம். அத்துடன் லாரா 4 குழந்தைகளுக்கு தாய். 2021 ஆம் ஆண்டு முதல் ரீஸுடன் தொடர்பில் இருந்து வரும் இவர், ரீஸைக் காதலித்ததாகவும், அவருடைய நேர்மையால் ஈர்க்கப்பட்டு அவருடைய கவிதைகள், புத்தகங்களை படித்ததாகவும் தெரிகிறது. மேலும் ரீஸ்க்கு லாராவும் கவிதைகள் மற்றும் கடிதங்களை அனுப்புவது வழக்கம்.  ரீஸூம் சிறையில் காலத்தை கழித்த பிறகு வித்தியாசமான நபராக மாறிவிட்டதாகக் லாராவிடம் கூறியுள்ளார்.

இப்படி நேரில் சந்தித்திராத இந்த ஜோடி, கைதிகளுடன் மக்கள் தொடர்பு கொள்ள உதவும் மொபைல் மூலமாக பேசியுள்ளனர்.  லாராவின் தாய் மற்றும் சகோதரி லாரா - ரீஸ் தம்பதியின் இந்த உறவுக்கு பச்சைக்கொடி காட்டினாலும், ரீஸை லாரா திருமணம் செய்யவிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் சிறையில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.!

Also Read | கணவர் இறந்து.. 2 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை.. "அவரு மேல அம்புட்டு லவ்வு'ங்க.." மனம் உருக வைத்த மனைவி..

TERRELL RAVON REESE, LAURA O SULLIVAN

மற்ற செய்திகள்