'கர்ப்பமாக இருக்கும் போது மீண்டும் கருவுற்ற பெண்'... 'அசந்துபோன மருத்துவ உலகம்'... 'ஒரு பக்கம் பயம்'... ஆனா பிரசவத்தின் போது நடந்த ஆச்சரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பெண் ஒருவர் மீண்டும் கர்ப்பமான நிகழ்வு மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில நேரங்களில் உலகில் நடக்கும் நிகழ்வுகள் மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. பல விசித்திரமான, நம்ப முடியாத அரிய நிகழ்வுகளை வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. இங்கிலாந்தின் பாத் நகரைச் சேர்ந்த ரெபேக்கா ராபர்ட்ஸ். சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரெபேக்கா தனது கணவருடன் உடலுறவு கொண்ட நிலையில் சில நாட்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இதையடுத்து அவர் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இவர்கள் இரட்டையர்கள் என்றாலும் மூன்று வார இடைவெளியில் கருத்தரிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ உலகினை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த நிகழ்வினை சூப்பர்ஃபெட்டேஷன் என்று அழைக்கின்றனர். இதற்கிடையே ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்குக் காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான்.

இதனால் ரோசாலி 95 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண் குழந்தை நோவாக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் அந்த குழந்தையும் மூன்று வாரங்கள் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சூப்பர்ஃபெட்டேஷன் போன்ற அரிய நிகழ்வுகள் உலகில் 0.3% பெண்களை மட்டுமே பாதிக்கும்.

ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரண்டாவது குழந்தை கர்ப்ப காலத்தில் இறக்கிறது. ஆனால் ரெபேக்கா ராபர்ட்ஸுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் மருத்துவ உலகில் இது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்