"யாரும் போன் எடுக்கல, நீங்க தான் 'Help' பண்ணனும்.." பதறிய பெண்.. காரணம் கேட்டு கடுப்பான 'போலீஸ்'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

"காவல்துறை உங்கள் நண்பன்" என ஒரு கூற்று உள்ளது. அதன்படி, மக்களின் பாதுகாப்பிற்காக அனைத்து பகுதிகளிலும் ரோந்து வரும் போலீசார், மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், மறுகணமே சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள்.

Advertising
>
Advertising

Also Read | "கிம் கர்தாஷியன் மாதிரி மாறணும்.." 4 கோடி செலவு பண்ணி, 40 தடவ ஆபரேஷன்.. கடைசியா இளம்பெண் எடுத்த 'பரபரப்பு' முடிவு

அதே போல, எதிர்பாராத நேரத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தாலும் கூட, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, ஏராளமான் ஹெல்ப் லைன் எண்கள் கூட ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு, தங்களுக்கான பிரச்சனைகள் என்ன என்பதை தெரிவித்து விட்டால், அதற்கேற்ற வகையில் போலீசாரும் வந்து உதவி செய்வார்கள்.

போலீசார் எமர்ஜென்சிக்கு அழைத்த பெண்

அந்த வகையில், UK பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், போலீசாரின் எமர்ஜென்சி எண்ணுக்கு அழைத்துள்ளார். மறுமுனையில் பேசிய அதிகாரி, என்ன எமர்ஜென்சி என கேட்க, அழைத்த பெண்ணோ, "நான் இதற்காக நிறைய பேரை அழைத்தும் யாரும் போன் எடுக்கவில்லை. நீங்கள் தான் எனது கடைசி நம்பிக்கை" என குறிப்பிட்டு, தனது வீட்டில் உள்ள சிலந்தியை விரட்ட ஒருவர் வந்து உதவி செய்ய வேண்டும் என்றும், நான் கேலி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் சொன்ன அந்த போலீஸ் அதிகாரி, "எதிர்பாராத விதமாக உங்கள் வீட்டில் உள்ள சிலந்தியை விரட்ட எங்கள் போலீஸ் அதிகாரியால் வர முடியாது" என தெரிவித்துள்ளார். பலரும், உயிருக்கு ஆபத்து இருக்கும் சமயத்திலோ, அல்லது ஏதேனும் விபத்து தொடர்பாகவோ தான் போலீசாரின் எமர்ஜென்சி எண்ணை அழைப்பார்கள். ஆனால், இந்த பெண்ணோ சிலந்தியை விரட்ட போலீசாரை அழைத்தது, அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

"இந்த மாதிரி எப்பவும் கால் வருது.."

இது தொடர்பாக, அந்த பெண் பேசும் ஆடியோவை ட்விட்டரில் வெளியிட்ட வெஸ்ட் யார்க்ஷயர் போலீசார், "உங்கள் வீட்டில் சிலந்தி இருக்கிறது என்பதற்காக 999 என்ற எண்ணை அழைக்க வேண்டாம். எமர்ஜென்சி லைனுக்கு தேவை இல்லாத அழைப்பிற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. ஒரு நாளைக்கு சராசரியாக, இது போன்று 120 அழைப்புகளை நாங்கள் ஏற்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.

அதே போல, இது போன்று அவசரம் இல்லாத அழைப்புகள், வேறொரு அவசரமுள்ள அழைப்பினை தடுக்கவும் செய்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் கருத்துக்களை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | சொகுசு ஹோட்டலில் சூட் ரூம்.. கட்டணம் எதுவும் கிடையாது.. ஆனா இப்படி ஒரு கண்டிஷன் இருக்காம்..!

UK, WOMAN, WOMAN CALLS POLICE, SPIDER, HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்