‘இரவு, பகல் பாராமல்’... ‘கடைசி மூச்சு வரை செவிலியர் பணி’... ‘வெளியான உருக்கமான தகவல்’!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மார்கரெட் டாப்லி (Margaret Tapley) என்ற செவிலியர் ஓய்வு பெற்றவர். எனினும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால், 84 வயதிலும், மார்கரெட் வீட்டில் முடங்கியிருக்கவில்லை. இரவு பகல் பாராமல் கொரோனாவுக்கு எதிராக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். கடைசியில் இவரையும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பம் கலங்கி நின்றாலும், அவரது மன உறுதியை கண்டு திகைத்து உள்ளனர்.
இதுகுறித்து அவரது பேத்தி ஹன்னா டாப்லி பேசுகையில், “நான் என் வாழ்க்கையில் சந்தித்த வலிமை மிகுந்த பெண் அவர். துரதிர்ஷ்டவசமாக அவர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துவிட்டார். என்னுடைய பெற்றோரைப் போலத்தான் கருதினேன். அவர் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது. அவரை என் பாட்டி எனச் சொல்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர் கடினமான உழைப்பாளி அதேநேரத்தில் அனைவரின் மீது அக்கறை கொண்ட பெண்மணி.
தன் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துள்ளார். தினமும் மெசேஜ் இல்லையென்றால் போனில் எதாவது பேசுவார். நான் அவரை மிஸ் செய்கிறேன். எல்லாவற்றிலும் எனக்கு ஆதரவாக இருந்தார். இந்தச் சூழலுக்கு நான் எப்படி மாறுவேன் எனத் தெரியவில்லை. எங்கிருந்தாலும் அவர் என்னையும் எங்களது குடும்பத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என நம்புகிறேன். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.
மார்கரெட் மற்றொரு பேரக்குழந்தை டாம் வுட் செவிலியராக இருக்கிறார். அவர் பேசுகையில், “நான் இன்று ஒரு செவிலியராக இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். தான் ஒரு செவிலியர் என்பதில் பெருமிதத்தோடு இருந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்வார்” எனப் பெருமித்தோடு கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தொற்றால் இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவுமா? பரவாதா?.. விரிவான விளக்கம்!
- ‘கல்லையும், கட்டையையும் வச்சு அடிச்சாங்க’.. ‘மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?’.. சென்னை டாக்டர் கண்ணீர் மல்க உருக்கம்..!
- ‘எல்லோரையும் சமமா நடத்துங்க’... ‘வழிகாட்டுதல்களில் எல்லையை தாண்டுறீங்க’... ‘இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா’!
- 'சென்னையில்', தனியார் டிவி 'உதவி ஆசிரியருக்கு' கொரோனா... 'அலுவலகத்தை' தற்காலிகமாக பூட்டி சீல் வைத்த 'சுகாதாரத்துறை அதிகாரிகள்...'
- 'கொரோனா தாக்கிய நோயாளிகள்'... 'பெரும்பாலானோருக்கு இருந்த ஒரே ஒற்றுமை' ... ஒரு நிமிஷம் ஆடிப்போன விஞ்ஞானிகள் !
- 'இந்தியா' உட்பட 10 நாடுகளை விட 'இதை' அதிகமாக செய்துள்ளோம்... இல்லையென்றால் 'உயிரிழப்பு' பல மடங்கு 'உயர்ந்திருக்கும்'...
- கடைசில 'தண்ணி'யையும் இந்த 'கொரோனா' விட்டு வைக்கல போல... 'எந்த' நாட்டுலன்னு பாருங்க!
- 'என்ன இவருக்கு கொரோனா இல்லயா!?'... கொரோனா சிகிச்சை வார்டில் குழப்பம்... அசந்த நேரத்தில் அரங்கேறிய விபரீதம்!.. பதறவைக்கும் பின்னணி!
- போலீஸ் உடையில் வந்த 'மர்ம' நபரால் நிகழ்ந்த... '30 ஆண்டுகளில்' இல்லாத 'பயங்கரம்'... நாட்டையே 'உலுக்கியுள்ள' சம்பவம்...
- கொரோனா காலத்திலும் 'பாதுகாப்பான' 40 நாடுகள்... டாப் 10-க்குள் வந்த 'சீனா'... இந்தியாவுக்கு இடமில்லை!