'இந்த சின்ன வயசுலையே...' 'அவங்க பண்ணிருக்குறது ரொம்ப பெரிய விஷயம்...' 'ஸ்டூடண்ட்ஸ்-க்கு மட்டும் இல்ல, எங்களுக்கும் ரோல்மாடல்...' - பிரபல பல்கலைகழகத்தின் 'வித்தியாசமான' பாராட்டு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இளம் சூழலியலாளரான கிரேட்டா தன்பெர்க்கின்னை பாராட்டும் வகையில் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் செய்த சம்பவம் அனைவரையும் பூரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் என்னும் 15 வயது சிறுமி உலகின் பருவநிலை காக்க போராடி தற்போது இளம் சூழலியலாளராக பார்க்கப்படுகிறார்.

                                         

சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தன்னுடைய பள்ளி நாட்களில் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக மக்கள் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

                                    

கிரேட்டா, ஆட்டிசத்தின் ஒரு வகையான அசுபெர்கர் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உலகில் உணவுப்பழக்க வழக்கத்தினாலும் உலகம் சூடாகிறது என்று கூறி சைவ உணவை உண்பது மற்றும் விமான பயணத்தை தவிர்ப்பது என பல வகையிலும் புவி வெப்பமாவதைத் தடுக்க போராடி வருகிறார்.

                                          

இந்நிலையில் பிரிட்டனில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகம் சுமார் 23,760 யூரோ செலவில் கிரேட்டாவின் முழு உருவ சிலையை நிறுவியுள்ளது. இந்த சிலை நிறுவியதில் மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்பும் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

                                  

மேலும் இந்த நிகழ்வு குறித்து பல்கலைக்கழக வேந்தர் மெகன் பால் கூறியபோது, 'கிரேட்டா உலக அளவிலான பிரச்சனைகளை குறித்து குரல் எழுப்பி மாணவர்களுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்.

                            

கொரோனா காரணமாக மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு வருவதில்லை. இருப்பினும் சிலைபற்றி கூறியபோது, 23,760 யூரோ மாணவர்கள் மூலமாகக் கிடைத்தது.

                                           

கிரேட்டாவைபோல் மற்ற மாணவர்களும் உலக பிரச்சனைகள் குறித்து பேச முன்வரவேண்டும்' எனக் கூறினார்.

 

மற்ற செய்திகள்