'3.15 லட்சம்' 'ஹாங்காங்' மக்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்...' 'இங்கிலாந்து அரசின் அதிரடி அறிவிப்பு...' 'சீனா ஆத்திரம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்ஹாங்காங்கில் உள்ள 3.15 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா ஆத்திரமடைந்துள்ளது.
1999ஆம் ஆண்டு வரை ஒரு ஒப்பந்தத்தின் கீழ் ஹாங்காங் பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து இருந்தது. இதனால் ஹாங்காங் மற்ற சீன நகரங்களை விட நன்கு வளர்ச்சியடைந்தது. 1999ம் ஆண்டுக்குப் பிறகு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது. அதன்படி, ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.
இதுபோன்ற ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்துவதால் மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால், தற்காலிகமாக அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நேரத்தில் சீனா அரசு சத்தமில்லாமல் ஹாங்காங் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. முன்பு ஹாங்காங் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்துள்ளதால், அங்குள்ளோரில் பலர் வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் வெளிநாடுவாழ் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
ஆகவே, சீனா அவர்களை ஒடுக்க முயலும் நேரத்தில், தன் குடிமக்கள் என்ற முறையில், அவர்கள் மீதான அக்கறையால், இங்கிலாந்து சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, 3,15,000 வெளிநாடுவாழ் நாட்டினரின் விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய வெளியுறவுச்செயலர் டொமினிக் ராப் வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டினரின் விசா உரிமைகள் ஆறு முதல் 12 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.இது, அவர்கள் எதிர்காலத்தில் இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
இங்கிலாந்து அரசின் இந்த நடவடிக்கையால் சீனா ஆத்திரமடைந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “எங்க பிரச்சனைய நாங்க தீத்துக்குறோம் தலீவா!”.. 'மத்தியஸ்தரம்' செய்ய முன்வந்த டிரம்ப்.. 'சீனா' கொடுத்த பதிலடி!
- 'சீன' மாணவர்களுக்கு 'அடுத்த செக்...' "உளவு பார்த்தது போதும் கிளம்புங்க..." 'விசாவை' ரத்து செய்யும் 'அமெரிக்கா...'
- 'சீனா'வால அவரு 'மூட் அவுட்'ல இருக்காரு... 'அப்படி' எதுவும் நடக்கல... 'மனுஷன்' சொல்றதுல உண்மையில்ல!
- சபாஷ் 'சீனா'... 'வைரஸ்' எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்க... நாங்களும் 'ரெடியா' இருக்கோம்!
- 'எல்லையில்' போர் விமானங்களை நிறுத்தும் 'சீனா...' 'பல ஆயிரம் வீரர்கள் குவிப்பு...' 'கார்கிலுக்கு' பிறகு 'மோசமான பதற்றம்...'
- "பயிற்சி எடுங்கள்.. புரட்சி செய்யுங்கள்.. தயாராகுங்கள்!".. 'போருக்கு ஆயத்தமா?'.. ராணுவத்துக்கு சீன அதிபர் ஜிங்பிங் போட்ட ஆர்டர் என்ன?'.. 'கிடுகிடுக்க' வைக்கும் 'தகவல்கள்'!
- 'காரணம் கூறாமல்' சீனா மேற்கொள்ளும் 'ரகசிய நடவடிக்கை...' 'எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து...' 'அடுத்தடுத்த' நிகழ்வுகளால் 'பதற்றம்...'
- "இந்தியாவில் இருக்கும் நம் நாட்டு பிரஜைகளே! நீங்க சொந்த நாட்டுக்கு திரும்பணும்னு நினைச்சா.." ... ‘வேற லெவல்’ கண்டிஷன்களைப் போட்டு அழைக்கும் 'சீனா'!
- 'சென்னை மக்களே கொஞ்சம் ரிவைண்ட் பண்ணுங்க'... 'இந்த பூனைய ஞாபகம் இருக்கா?... 'சீனா TO சென்னை'... காப்பகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
- "சரி நாங்க ஒத்துக்கிறோம்..." ஆனால் 'விசாரணை' நியாயமாக 'நடக்க வேண்டும்'... 'இறங்கி வந்தது சீனா...'