'கையை வச்சிட்டு சும்மா இல்லாம'... 'Google Search-யில் மாணவர் கேட்ட கேள்வி'... ஆப்கனிஸ்தானில் கதிகலங்கி நிற்கும் பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விடுமுறையைக் கொண்டாட வேண்டும் என்று தெரிந்தே மாணவர் ஒருவர் ஆபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரத்தைச் சேர்ந்த மாணவர் மைல்ஸ் ரௌட்லெட்ஜ் (Miles Routledge). 21 வயதான இவர் Loughborough பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவருக்கு விடுமுறை கிடைத்த நிலையில், அதனை வீட்டிலிருந்து கொண்டாட விருப்பம் இல்லாமல் வேறு ஏதாவது இடத்திற்குச் சென்று வித்தியாசமாகக் கொண்டாடலாம் என முடிவு செய்துள்ளார்.

அதன்படி தனது மொபைலை எடுத்த அவர், Google searchயில் சென்று  'most dangerous countries to visit' என டைப் செய்துள்ளார். மைல்ஸ் கேட்ட கேள்விக்கு Google ஆப்கானிஸ்தான் எனப் பதில் கூற உடனே அங்குத் தனது விடுமுறையைக் கொண்டாடச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் தாலிபான் படையினர் ஆப்கானிஸ்தானை படிப்படியாகக் கைப்பற்றி வந்த நிலையில், இங்கிலாந்து அரசு தங்கள் மக்களை உடனடியாக நாடு திரும்பும்படி எச்சரித்தனர்.

ஆனால் நாம் தலைநகர் காபூலில் தானே இருக்கிறோம், அதுவும் பாதுகாப்பாகத் தானே இருக்கிறோம் தாலிபான்கள் அங்கு வருவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகலாம் என மைல்ஸ் தனது விடுமுறையைக் கொண்டாடி வந்துள்ளார். ஆனால் நேற்று ஒரே நாளில் நிலைமை தலைகீழாக மாறியது. தாலிபான் படையினர் காபூலையும் பிடித்து ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்து, ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்களின் வசம் வந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.

இதனால் மைல்ஸ் நாடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டார். அந்த வகையில் தனது நிலைமையை முகநூல் பக்கத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார். மேலும் காபூலில் விமான நிலையத்திற்குச் செல்ல, தலையில் புர்கா அணிந்து செல்லவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதாகவும், இருப்பினும் விமானநிலையம் கலவரமாகக் காணப்பட்டதால் அங்குச் செல்லமுடியாமல் மீண்டும் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டதாக அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

தற்போது, காபூலில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்குத் தொடர்பு கொண்டுள்ள மைல்ஸ் ரௌட்லெட்ஜ், எப்படியாவது வீட்டுக்கு உயிருடன் சென்றுவிடவேண்டும் என்ற பதைபதைப்பில் உள்ளார். இதற்கிடையே மாணவர் மைல்ஸ் ரௌட்லெட்ஜ்க்கு பலரும் சமூக வலைத்தளங்களில் ஆறுதலும் தைரியமும் கூறி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்